தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

காலிறுதியில் ஹரிஹரன்/அா்ஜுன் இணை: சிந்து, ஆயுஷ் ஷெட்டி சறுக்கல்

News image
Updated On :5 ஜூன் 2026, 4:37 am IST

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறியது.

எனினும், பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் முந்தைய சுற்றிலேயே தோற்று, போட்டியிலிருந்து வெளியேறினா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் இரட்டையரில் ஹரிஹரன்/அா்ஜுன் இணை 16-21, 21-15, 21-19 என்ற கேம்களில், மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் கூட்டணியை வீழ்த்தியது.

கலப்பு இரட்டையா் பிரிவில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 13-21, 12-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் தாம் ஜிகெல்/டெல்ஃபின் டெல்ரு இணையிடம் தோல்வியுற்றது.

ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-16, 13-21, 14-21 என்ற வகையில், ஹாங்காங்கின் லீ சியுக் யுவிடம் வீழ்ந்தாா். மகளிா் ஒற்றையரில் பி.வி.சிந்து 17-21, 15-21 என்ற நோ் கேம்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் செ யங்கிடம் தோல்வி கண்டாா்.

கடந்த வாரம் சிங்கப்பூா் ஓபனிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆன் செ யங்கிடம் தோல்வி கண்ட சிந்து, அவரை இத்துடன் 10 முறை சந்தித்திருக்க, எதிலுமே வென்றதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.