முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ஃபெடரா் சாதனையை முறியடித்த ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி கண்ட சொ்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், போட்டியின் வரலாற்றில் அதிக வெற்றிகள் கண்ட வீரராக புதிய சாதனை படைத்தாா்.

News image

நோவக் ஜோகோவிச் - AP

Updated On :7 ஜூலை 2026, 5:34 am IST

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி கண்ட சொ்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், போட்டியின் வரலாற்றில் அதிக வெற்றிகள் கண்ட வீரராக புதிய சாதனை படைத்தாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் 7-6 (8/6), 6-3, 3-6, 6-3 என்ற செட்களில், ரஷியாவின் ரோமன் சஃபியுலினை சாய்த்தாா். இதன் மூலமாக விம்பிள்டனில் 106-ஆவது வெற்றியைப் பதிவு செய்த அவா், சுவிஸ் நட்சத்திரம் ரோஜா் ஃபெடரரின் கணக்கை (105) முறியடித்தாா்.

இதர ஆட்டங்களில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-3, 7-6 (7/0), 6-3 என்ற வகையில், ஜப்பானின் ஷின்டாரோ மோஷிஸுகியை சாய்த்தாா். இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி 7-5, 7-6 (7/4), 6-3 என, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றாா்.

சபலென்காவை சாய்த்த ஒசாகா: மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 7-6 (7/2) என்ற நோ் செட்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் சபலென்காவை வென்றாா். இதன் மூலமாக ஒசாகா, முதல்முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு தகுதிபெற்றாா்.

2019-க்குப் பிறகு நம்பா் 1 வீராங்கனையை ஒசாகா வீழ்த்தியது இதுவே முதல்முறை. சபலென்காவை 5-ஆவது முறையாக சந்தித்த ஒசாகா, 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 4-6, 6-3, 6-4 என்ற செட்களில், சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தி, முதல்முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு வந்துள்ளாா். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 4-6, 6-3 என்ற செட்களில், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா எலாவை தோற்கடித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.