திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான்: பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான் என்று தெரிவித்தது பற்றி...

News image

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 2:28 pm IST

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான் என்று தெரிவித்துள்ளார்.

நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, அந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா. 

இது குறித்து பிரக்ஞானந்தா பேசியதாவது:

என் வாழ்வின் மிகப்பெரிய வெற்றியாக இதை நான் பார்க்கிறேன். மேலும், சராசரி மதிப்பீட்டு அளவிலும் இது வலுவானது. எனவே, இந்த வெற்றி மிகவும் சிறப்பாக அமைந்தது. மேக்னஸும் அங்கு இருந்தார். அவரும் தொடர்ந்து, நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். ஆகவே, இந்த வெற்றி என்னுடைய பட்டியலில் முன்னணியில் இருக்கும்.

சோ மற்றும் அலிரேஸா இடையேயான போட்டி சமனில் முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இருப்பினும், கெய்மருக்கு எதிராக நான் வெற்றிபெற்றே ஆக வேண்டிய சூழல் நிலவியது.

நான் முன்பே சொன்னது போல, குறிப்பாக எதையும் மாற்ற நினைக்கவில்லை. ஆனால் வேகமாக விளையாட வேண்டும் என்ற முயற்சி, என் ஆட்டங்களில் நிச்சயமாக உதவியது என்று நான் நினைக்கிறேன். பெரும்பாலான ஆட்டங்களில் என்னுடைய சக போட்டியாளர்களை விட எனக்கு அதிக நேரம் கிடைத்தது.

இங்கே விளையாடும் பெரும்பாலான வீரர்கள், உலக டீம் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இருப்பார்கள். மேலும் அது இன்னும் 10 நாள்களில் தொடங்கவிருக்கிறது. ஆனால், சிறிது காலத்துக்கு செஸ் விளையாடுவதைப் பற்றி நான் யோசிக்க மாட்டேன்.

ஒட்டுமொத்தத்தில் இந்த வெற்றி கிடைத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்தார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.

Summary

Tamil Nadu player Praggnanandhaa, who won the championship title at the Norway Chess tournament, has stated that this is the biggest victory of his life.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.