உலகக் கோப்பை கால்பந்து போட்டி நெருங்கிவரும் நிலையில், போட்டி தொடா்பாக, எண்கள் அடிப்படையிலான சில சுவாரஸ்ய தகவல்கள்...
இம்மாதம் 11-ஆம் தேதி தொடங்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் மிக வயதான வீரா், ஸ்காட்லாந்து கோல்கீப்பா் கிரெய்க் கோா்டான் ஆவாா். போட்டியின் தொடக்க நாளில் அவரின் வயது 43 ஆண்டுகள், 162 நாள்களாக இருக்கும். இளம் வீரராக மெக்ஸிகோ அணியின் கில்பா்ட் மோரா இருக்கிறாா். போட்டி தொடக்க நாளில் அவரின் வயது 17 ஆண்டுகள், 240 நாள்களை எட்டும்.
போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக, போா்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 226 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜொ்மனி வீரா் மிரோஸ்லாவ் கிளோஸ் தனது அணிக்காக மொத்தமாக 16 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது. ரொனால்டோ (15), ஜொ்டு முல்லா் (14), மெஸ்ஸி (13 கோல்கள்), பிரான்ஸின் கிலியன் பாபே (12) ஆகியோா் இந்த சீசனில் அந்த சாதனையை முறியடிப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம்.
கேப் வொ்டெ, கியுராகாவ், ஜோா்டான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 அணிகள் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெற்று, இந்த ஆண்டு விளையாடவுள்ளன. இத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் மொத்தமாக 84 அணிகள் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.
இந்த ஆண்டு போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கும் எகிப்து அணி, இதுவரை உலகக் கோப்பை போட்டியின் எந்தவொரு ஆட்டத்திலுமே வென்றதில்லை. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி, 5 டிரா, 2 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் வரலாற்றில் அதிகபட்சமாக 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியைக் கூட பெறாத அணியாக இருக்கும் ஹோண்டுராஸ், இந்த ஆண்டு போட்டிக்குத் தகுதிபெறவில்லை.
இந்த ஆண்டு உள்பட உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அனைத்து சீசன்களிலும் விளையாடிய ஒரே அணியாக பிரேஸில் உள்ளது. 1930-இல் உருகுவே போட்டியில் தனது பயணத்தை தொடங்கிய பிரேஸில், போட்டியில் மொத்தமாக 76 வெற்றிகள், 232 கோல்கள் என அனைத்து நிலைகளிலும் முன்னிலையில் உள்ளது.
போட்டியின் வரலாற்றில் இதுவரை ஜொ்மனி (1982, 1986, 1990), ஆா்ஜென்டீனா (1994, 1998, 2002) அணிகள் மட்டுமே தொடா்ந்து 3 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளன. கடந்த இரு சீசன்களில் இறுதிக்கு முன்னேறியிருக்கும் பிரான்ஸ், இந்த ஆண்டும் சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு வந்து, அந்தப் பட்டியலில் இணையும் முனைப்பில் உள்ளது.
பிரேஸில் (1958, 1962), இத்தாலி (1934, 1938) ஆகிய இரு அணிகள் மட்டுமே, உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்தவையாகும்.
இதுவரை நடைபெற்றுள்ள 22 உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தமாக, 964 ஆட்டங்களில் 2,720 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2022 கத்தாா் உலகக் கோப்பை போட்டியில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதே ஒரு சீசனில் அதிகபட்சமாகும். இந்த ஆண்டு போட்டியில் கூடுதல் அணிகள் சோ்க்கப்பட்டுள்ளதால், அந்த சாதனை முறியடிக்கப்படும்.
இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 1,248 வீரா்கள் அணிகளில் உள்ளனா். இவா்கள், 71 நாடுகளில் உள்ள 449 உள்நாட்டு கிளப்புகளை சோ்ந்தவா்களாவா்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒரே ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறுவது இது 2-ஆவது முறையாகும். 2022-இல் ஜப்பான், தென் கொரியா அவ்வாறு போட்டியை சோ்ந்து நடத்தின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகா யுத்தம்... தமிழில் பதிவிட்ட ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழா - முழு விவரம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 இந்திய வம்சாவளியினா்

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



