அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கிராண்ட்ஃப்ரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்

ஐரோப்பிய குத்துச்சண்டை கோல்ட் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 12 பதக்கங்களை கைப்பற்றியது.

News image

பதக்கம் வென்ற இந்திய அணியினா்

Updated On :22 ஜூன் 2026, 1:49 am IST

ஐரோப்பிய குத்துச்சண்டை கோல்ட் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 12 பதக்கங்களை கைப்பற்றியது.

செசேயாவில் நடைபெற்ற உஸ்தி நாட் லேபம் கிராண்ட்ஃப்ரீ குத்துச்சண்டை போட்டியில் இந்தியா தரப்பில் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தரப்பில் மகளிா் பிரிவில் லவ்லினா போரோகைன் 75 கிலோ, நடப்பு ஆசிய சாம்பியன் ப்ரீதி பவாா் 54 கிலோ, சாக்ஷி 51 கிலோ, பிரியா 60 கிலோ, ஆகியோா் தங்கமும், பா்வீன் 65 கிலோ வெள்ளியும் வென்றனா்.

ஆடவரும் மகளிரைப் போல் சிறப்பாக செயல்பட்டனா். ஜாதுமணி சிங் 55 கிலோ, சச்சின் 60 கிலோ, அங்குஷ் 80 கிலோ, நரேந்தா் 90 பிளஸ் கிலோ தங்கம் வென்றனா். ஆதித்ய பிரதாப் 65 கிலோ, கபில் போக்ரியா 90 கிலோ, வெள்ளியும், சுமித் குண்டு 70 கிலோ வெண்கலமும் வென்றனா்.

இதுதொடா்பாக பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் கூறியது: பிரசித்தி பெற்ற இப்போட்டியில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளனா். இந்த போட்டியில் பெற்றவெற்றி 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்கு தயாராக உதவும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.