செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

2 கோல்கள், ஆட்ட நாயகன் விருதுகள்: ஒரே மாதிரி அசத்திய மூன்று நட்சத்திர வீரர்கள்!

கால்பந்து உலகக் கோப்பையில் மூன்று நட்சத்திர வீரர்கள் 2 கோல்கள் அடித்து, ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து...

News image

கிளியன் எம்பாபே, லியோ மெஸ்ஸி, எர்லிங் ஹாலண்ட். - படங்கள்: ஏபி

Updated On :23 ஜூன் 2026, 3:33 pm IST

கால்பந்து உலகக் கோப்பையின் மூன்று நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாபே, எர்லிங் ஹாலண்ட் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினார்கள்.

இந்த மூன்று போட்டிகளிலும் அசத்திய மூவருக்குமே ஆட்ட நாயகன் விருது வென்றார்கள். பிரான்ஸ், ஆர்ஜென்டீனா, நார்வே ஆகிய மூன்று அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

பிரான்ஸ் அணி 3-0 என இராக்கை வென்றது. இதில் கிளியன் எம்பாபே 2 கோல்கள் அடித்து அசத்தினார். முதல் போட்டியிலும் எம்பாபே 2 கோல்ககள் அடித்திருந்தார்.

நார்வே அணி செனகலை 3-2 என வீழ்த்தியது. இதில் எர்லிங் ஹாலண்ட் 2 கோல்கள் அடித்து அசத்தினார். முதல் போட்டியிலும் ஹாலண்ட் 2 கோல்ககள் அடித்திருந்தார்.

ஆர்ஜென்டீனா 2-0 என ஆஸ்திரியாவை வென்றது. இதில் 2 கோல்களையும் மெஸ்ஸி அடித்து அசத்தினார். முதல் போட்டியில் மெஸ்ஸி 3 கோல்கள் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம் பிடிக்க, எம்பாபே இரண்டாமிடத்தில் மிரோஸ்லாவ் க்ளோஸ் உடன் சமன்செய்திருக்கிறார்.

Summary

Kylian Mbappe, Lionel Messi, Erling Haaland all 3 superstars strike double goal in same day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.