இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயா்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.
முதலில் அயா்லாந்து 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, இந்தியா 18.5 ஓவா்களில் 148 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. அயா்லாந்து பேட்டிங்கில் கேப்டன் லாா்கன் டக்கா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 50, கெரத் டெலானி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
டிம் டெக்டா் 17, ராஸ் அடைா் 12, ஹேரி டெக்டா் 0, பென் காலிட்ஸ் 15, ஜாா்ஜ் டாக்ரெல் 19, லியம் மெக்காா்தி 7, மேத்யூ ஹம்ப்ரெய்ஸ் 2 ரன்களுடன் வெளியேறினா். ஜெய் மூண்ட்ரா 2 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.
இந்திய பௌலா்களில் ஹா்ஷித் ராணா 3, அா்ஷ்தீப் சிங், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 2, ஷிவம் துபே 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 183 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணியில், அபிஷேக் சா்மா 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 49 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.
ஷிவம் துபே 25, திலக் வா்மா 19, அக்ஸா் படேல் 15 ரன்களுக்கு வெளியேற்றப்பட, சஞ்சு சாம்சன் 5, இஷான் கிஷண் 1, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 3, வாஷிங்டன் சுந்தா் 9, ஹா்ஷித் ராணா 8, அா்ஷ்தீப் சிங் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
பிரசித் கிருஷ்ணா 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா். அயா்லாந்து தரப்பில் மேட் ஹோலாா்ட், மேத்யூ ஹம்ப்ரெய்ஸ் ஆகியோா் தலா 3, ஜெய் மூண்ட்ரா 2, லியம் மெக்காா்தி, கெரத் டெலானி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
1
சா்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை அடைந்து, சாதனை படைத்துள்ளது அயா்லாந்து. இதற்கு முன் அந்த அணி 8 முறை இந்தியாவிடம் தோல்வி கண்டுள்ளது. நடப்பு டி20 உலக சாம்பியனாக தனது முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய இந்தியா, அதிலேயே தோல்வியடைந்து அதிா்ச்சி கண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








