ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் - அவுட் சுற்றில் பராகுவே வென்றதற்கு அந்நாட்டு அதிபர் ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் - அவுட் சுற்றில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனியை பராகுவே தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து, பராகுவே நாட்டு அதிபர் ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
ஜெர்மனி - பராகுவே அணிகள் மோதிய நாக் - அவுட் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து, வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டிலும் இரு அணிகளும் 5-க்கு தலா 3 கோல்கள் அடித்தனர்.
இறுதியாக சடன் டெத் முறையில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜெர்மனி கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது. பராகுவே அணியின் ஜோஸ் கனாலே நிதானமாக அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
கால்பந்து உலகின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜெர்மனி அணியை பராகுவே தோற்கடித்தது அதிர்ச்சிகரமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

பராகுவே தலைநகர் அசுன்சியோன்-வில் வெற்றியைக் கொண்டாடும் மக்கள்
இதுவரை 9 உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்றுள்ள பராகுவே அணி 2010 ஆம் ஆண்டில் காலிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்ததே அந்த அணியின் சிறப்பான பங்கேற்பாகப் பார்க்கப்படுகிறது. 2010-க்குப் பின் 16 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்ற பராகுவே அணி ஜெர்மனியைத் தோற்கடித்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனைக் கொண்டாடும் விதமாக பராகுவே அதிபர் அந்நாட்டிற்கு ஒருநாள் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.
பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனா தனது மனைவியுடன் - X
இதுபற்றி, அதிபர் சாண்டியாகோ பெனா வெளியிட்ட அறிக்கையில், “ஜெர்மனிக்கு எதிராக பராகுவே கால்பந்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் வகையில், ஜூன் 30 அன்று தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பதிவில், “இன்று மொத்த நாடும் வெற்றியைக் கொண்டாடுகிறது. நாட்டின் அடையாளத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் நமது அணியின் வெற்றியை நாடே கொண்டாடுகிறது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கும் மகிழ்ச்சியைப் பரிசளித்ததற்கும் லட்சக்கணக்கான பராகுவே மக்களை மீண்டும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்ததற்கும் நன்றி. சிறந்த விஷயங்கள் காத்திருப்பதற்குத் தகுதியானவையே. முன்னேறிச் செல் பராகுவே” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Historic victory: Paraguay President announces public holiday!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக் அவுட் சுற்றில் மங்கிய ஆப்பிரிக்க அணிகளின் ஆதிக்கம்..! 9ல் 2 மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

72 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றி: அல்ஜீரியாவை வென்று ஸ்விட்சர்லாந்து சாதனை!

95-வது நிமிடத்தில் அடித்த கோல்: ஜப்பானை நாக் - அவுட் செய்த பிரேசில்!







