கால்பந்து உலகக் கோப்பையின் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆப்பிரிக்க அணிகள் புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளன. பத்து ஆப்பிரிக்க அணிகளில் ஒன்பது அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.
லீக் சுற்றில் அல்ஜீரியா, கேப் வெர்டே, காங்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து துனிசியா மட்டுமே வெளியேறியுள்ளது.
கடந்த உலகக் கோப்பையில் மொராக்கோ அணி அரையிறுதிக்குச் சென்றது. இந்த முறையும் பிரேசில் அணியுடன் 1-1 என டிரா செய்தது. அடுத்த உலகக் கோப்பையை (2030) இந்த நாடு நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, 6 ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கின்றன. 2014 (அல்ஜீரியா, நைஜீரியா), 2022 (மொராக்கோ, செனகல்) ஆகிய உலகக் கோப்பைகளில் அதிகபட்சமாக 2 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.
இந்தமுறை, 10ல் 9 ஆப்பிரிக்க அணிகள் தேர்வாகி வரலாறு படைத்துள்ளது. இதில், காங்கோ, கேப் வெர்டே முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியிருப்பதும் கவனம் பெற்றுள்ளது. கடைசி போட்டியில் காங்கோ அணியில் ஆட்ட நாயகன் விருது வென்ற யோவான் விஸ்ஸா கூறியிருப்பதாவது:
52 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறோம். நான்காண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாட தேர்வானோம். போர்ச்சுகலுடன் டிரா, கொலம்பியாவுடன் தோல்வி, கடைசி போட்டியிலும் முதல் 10 நிமிஷத்தில் 0- 1 என இருந்தோம். கால்பந்தில் எளிதென்பது கிடையாது. கடினமான நேரங்களில் துவண்டுபோகாமல் இருக்க வேண்டும். இந்த மாதிரி நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; ஏனெனில், இது எளிதானதல்ல.
தற்போது, ஒவ்வொரு ஆப்பிரிக்க அணியும் பெரிதாகக் கனவு காணும். கடைசி உலகக் கோப்பையில் மொராக்கோ அரையிறுதி வரைக்கும் சென்றது. ஆப்பிரிக்க அணிகளுக்கு அடுத்து என்ன வந்தாலும் நல்லதாகவே வரும். சாதிகி, மகாயு என்ற இளம் வீரர்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. அதனால், எல்லாமே நல்லதுதான். இதனால், எங்கள் கூட்டமைப்பு பெரிதாக கனவு காண முடியும் என்றார்.
Summary
History made, Nine out of ten African teams secure World Cup round of 32 berth
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











