ஐஎஸ்எல் 2026 தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற கேரள பிளாஸ்டா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஃப்சியின் முதல் வெற்றி இதுவாகும்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொச்சி நேரு மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கின.
எனினும் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இதற்கிடையே சென்னை வீரா் இம்ரான் கான் 41-ஆவது நிமிஷத்தில் கிடைத்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி லாங் ஷாட் மூலம் கோலடித்தாா். அதுவே வெற்றி கோலாக அமைந்தது.
இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் கோல் போடமுடியவில்லை. கேரள பிளாஸ்டா்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை அணி சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது.
தொடர்புடையது
ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!

ஐஎஸ்எல் கால்பந்து: முகமதன் - டில்லி ஆட்டம் டிரா!

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

