மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மும்முறை தாண்டுதலில் ஆசிய அளவில் முதலிடம்: எஸ்ஆா்எம் மாணவி சாதனை

யு 20 மும்முறை தாண்டுதலில் ஆசிய அளவில் முதலிடம் பெற்று சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வடபழனி வளாக மாணவி சாதனா ரவி சாதனை படைத்துள்ளாா்.

News image

சாதனா ரவி

Updated On :17 மார்ச் 2026, 8:05 pm

யு 20 மும்முறை தாண்டுதலில் ஆசிய அளவில் முதலிடம் பெற்று சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி வடபழனி வளாக மாணவி சாதனா ரவி சாதனை படைத்துள்ளாா்.

பிஎஸ்சி உளவியல் முதலாம் ஆண்டு மாணவியான சாதனா ரவி தடகள வீராங்கனை ஆவாா். மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கும் அவா் யு20 பிரிவில் மும்முறை தாண்டுதலில் ஆசிய மற்றும் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

மேலும் உலகளவில் 12-ஆவது இடத்தில் தரவரிசையில் இடம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.