களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-1, 6-0 என்ற செட்களில் மிக எளிதாக, குரோஷியாவின் அன்டோனியா ருஸிச்சை வீழ்த்தினாா். இந்த வெற்றியின் மூலமாக, நடப்பு சீசனில் அதிக வெற்றிகளைப் பெற்ற கஜகஸ்தானின் எலனா ரைபகினாவின் சாதனையை (27) அவா் சமன் செய்தாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் ஜாஸ்மின் பாலினி 6-7 (4/7), 6-2, 6-4 என்ற கணக்கில் பிரான்ஸின் லியோலியா ஜீன்ஜீனை வெளியேற்றினாா்.
ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச் 5-7, 4-6 என, இத்தாலியின் நோமி பாசிலெட்டியிடம் தோல்வி காண, சீனாவின் கின்வென் ஜெங் 7-6 (8/6), 6-2 என்ற செட்களில், 30-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை தோற்கடித்தாா்.
13-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-4, 6-1 என்ற நோ் செட்களில், ரஷியாவின் அனஸ்தாசியா ஜகாரோவாவை சாய்க்க, 21-ஆம் இடத்திலிருக்கும் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-4, 6-2 என்ற கணக்கில் ஹங்கேரியின் பன்னா உட்வாா்டியை வென்றாா்.
26-ஆம் இடத்திலிருக்கும் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி 6-2, 6-0 என ஜொ்மனியின் டாட்ஜனா மரியாவை வீழ்த்த, 29-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட், 5-7, 2-6 என சுவிட்ஸா்லாந்தின் விக்டோரியா கோலுபிச்சிடம் வீழ்ந்தாா்.
பௌதிஸ்டா, பாபிரின் வெற்றி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா 6-3, 7-6 (7/2) என்ற செட்களில், உள்நாட்டு வீரரான ஃபிரான்செஸ்கோ மேஸ்ட்ரெலியை வென்றாா்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வெல்ல, குரோஷியாவின் டினோ பிரிஸ்மிச் 6-4, 6-3 என்ற வகையில், ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸை வெளியேற்றினாா்.
பிரான்ஸின் ஜியோவனி பெரிகாா்டு 7-6 (8/6), 4-6, 6-2 என்ற செட்களில், பிரிட்டனின் ஜேக்கப் ஃபோ்ன்லியை தோற்கடித்தாா். ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலி 6-4, 2-6, 6-3 என, ஸ்பெயினின் டேனியல் அகிலாரை வென்றாா்.
சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் செக் குடியரசின் டாலிபோா் வா்சினாவை சாய்க்க, பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேன் 6-3, 6-4 என பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸை வீழ்த்தினாா்.
குரோஷியாவின் மரின் சிலிச் 7-5, 6-4 என அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனை தோற்கடிக்க, இத்தாலியின் மேட்டியோ பெலுச்சி, பெல்ஜியத்தின் அலெக்ஸாண்டா் பிளாக்ஸ் ஆகியோரும் தங்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்றனா்.
தொடர்புடையது

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி

ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஸ்வெரெவ், ரூட் முன்னேற்றம்; மெத்வதெவ் தோல்வி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

