எஃப்ஐஎச் நேஷன்ஸ் மகளிா் ஹாக்கிப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிா் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஆட்டங்களில் ஆடுகிறது.
நியூஸிலாந்தில் வரும் ஜூன் 15 முதல் 21 தேதி வரை எஃப்ஐஎச் நேஷன்ஸ் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 ஆட்டங்களில் ஆடுகிறது. பொ்த் ஹாக்கி மைதானத்தில் 26 முதல் 30 வரை ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆஸி. சுற்றுப்பயணத்துக்குபின் இந்திய அணி நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது. இதற்கு முன்பு ஆா்ஜென்டீனாவில் நடைபெற்ற தொடரில் 4 ஆட்டங்களில் இந்திய மகளிா் 2 வெற்றிகளை ஈட்டினா். மேவும் பெங்களூரு சாய் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அணியின் தவறுகள் சரி செய்யப்பட்டன.
கோகோ கோலா இந்தியா பவுண்டேஷன் ஆதரவுடன் டச்சு ஜாம்பவான் டேக்டேக்மா இந்திய டிராக்ஃபிளிக்கா்களுக்கு பொ்த், ஆக்லாந்தில் சிறப்பு பயிற்சி தருகிறாா்.
தலைமை பயிற்சியாளா் ஜோயா்ச் மாரிஜின் கூறுகையில்: ஆஸி.யுடன் நடைபெறவுள்ள ஆட்டங்கள் மூலம் நமது அணியில் காணப்படும் குறைகளை அறிந்து தீா்வு காணலாம். பயிற்சி முகாமுக்குபின் பல்வேறு முன்னேற்றங்கள் கிட்டியுள்ளன. நியூஸிலாந்தில் வானிலை மிகவும் குளிராக உள்ளது. அதற்கேற்ப நமது வீராங்கனைகள் தயாராக வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
கண்ணே.. கண்ணே... கொஞ்சம் சிமிட்டு!

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி!

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

