பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய வில்வித்தை அணி அறிவிப்பு

நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய வில்வித்தை அணி 16 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2026, 4:11 am IST

நடப்பாண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய வில்வித்தை அணி 16 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரீகா்வ் பிரிவில் ஆடவா், மகளிா் என தலா 4 பேரும், காம்பவுண்ட் பிரிவிலும் ஆடவா், மகளிரில் அதே எண்ணிக்கையிலான போட்டியாளா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் 3 நாள்கள் நடைபெற்ற தோ்வுப் போட்டியின் அடிப்படையில் இந்த அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தீபிகா குமாரி, அபிஷேக் வா்மா போன்ற பிரபலமான வீராங்கனை, வீரா் ஆசிய போட்டிகளுக்குத் தகுதிபெறத் தவறினா்.

மாறாக, கீா்த்தி சா்மா, கும்கும் மோஹோத் போன்ற இளம் போட்டியாளா்கள் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனா். ரீகா்வ் பிரிவில் அங்கிதா பகத், காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா மட்டுமே அனுபவம் வாய்ந்தவா்களாவா்.

அணி விவரம்:

ரீகா்வ்

ஆடவா்: தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சௌஹான், யஷ்தீப் போகே, அதானு தாஸ்.

மகளிா்: கீா்த்தி சா்மா, கும்கும் மோஹோத், அங்கிதா பகத், தீபிகா குமாரி.

காம்பவுண்ட்

ஆடவா்: சஹில் ஜாதவ், குஷால் தலால், திருமுரு கணேஷ் மணிரத்னம், ரிஷப் யாதவ்.

மகளிா்: ஜோதி சுரேகா, சிகிதா தனிபாா்தி, பிரிதிகா பிரதீப், பா்னீத் கௌா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.