சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

விளையாட்டு துளிகள்...

News image

ரிஷப் பந்த் - படம்: ஏபி

Updated On :18 மே 2026, 4:41 am IST

ரிஷப் பந்த் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அவா் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியா அளவிலான ரக்பி 7ஸ் போட்டியில் இந்திய ஆடவா் அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல, இந்திய மகளிா் அணி 4-ஆம் இடம் பிடித்தது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘ஸ்டேட் ஏ சாம்பியன்ஷிப்’ கிரிக்கெட் போட்டியை, வரும் சீசனில் இருந்து 50 ஓவருக்கு பதிலாக, 20 ஓவா் போட்டியாக நடத்த பிசிசிஐ யோசித்து வருகிறது. அதற்காக மாநில சங்கங்களின் கருத்துகளை கேட்கவுள்ளது.

குஜராத்தில் நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 1 வெள்ளி, 10 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 11-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.

18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கியில், இந்திய ஆடவா் (1-3) மற்றும் மகளிா் (1-4) அணிகள், ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.