
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கில் கோப்பை வென்றது ஆர்செனல்!
பிரீமியர் லீக்கில் கோப்பை வென்ற ஆர்செனல் அணி குறித்து...

ஆர்செனல் அணி, அதன் பயிற்சியாளர். - படங்கள்: எக்ஸ் / ஆர்செனல்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்செனல் கால்பந்து அணி கோப்பை வென்று அசத்தியுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மான்செஸ்டர் சிட்டி அணி போர்ன்மௌத் அணியுடன் 1-1 என சமன்செய்ததால், ஆர்செனல் அணிக்கு கோப்பை உறுதிசெய்யப்பட்டது. மீதமிருக்கும் ஒரு போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வென்றாலும் ஆர்செனல் அணியை புள்ளிப் பட்டியலில் முந்த முடியாது என்பதால் கோப்பை உறுதியாகிவிட்டது.
நடப்பு சீசனில் ஆர்செனல் - மான்செஸ்டர் சிட்டி அணிக்கு போட்டி நிலவி வந்தது. இருப்பினும் ஆர்செனல் அணி விடாப்பிடியாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
பிரீமியர் லீக்கில் பலமுறை இரண்டாமிடம் பிடித்து சோக்கர்ஸ் எனப்படும் ஆர்செனல் அணி தற்போது கோப்பை வென்று அசத்தியுள்ளார்கள்.
ஆர்செனல் அணிக்கு இது 14ஆவது பிரீமியர் லீக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2003-04ல் ஆர்செனல் அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பை வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆர்செனல் அணி பிஎஸ்ஜியுடன் மே.30ஆம் தேதி மோதவிருக்கிறது. இன்னும் சாம்பியன்ஸ் லீக்கில் கோப்பை வெல்லாத ஆர்செனல் அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பும் காத்திருக்கிறது.
ஆர்செனல் அணிக்கு மைக்கேல் ஆர்டெ மேலாளாராக 2019ல் பொறுப்பேற்றார். இவரது தலைமையில் ஆர்செனல் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
We did it, together. pic.twitter.com/wQDp02LvLd
— Arsenal (@Arsenal) May 19, 2026
Summary
Arsenal win first Premier League title in 22 years after Man City draw
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






