இந்தியா ரைசிங் செஸ் குவாலிஃபயா்ஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, காா்திகேயன் முரளி, ரவுனக் சத்வானி, பிரானேஷ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
ஜியோபிளாஸ்ட், ஈ ஸ்போா்ட்ஸ் பவுன்டேஷன் சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் முதல் 8 இடங்களில் நுழைந்துள்ளனா்.
9 சுற்றுகள் கொண்ட இத்தொடா் ஸ்விஸ் முறைப்படி நடைபெறும். இந்தியா மற்றும் சா்வதேச அளவில் 12 கிராண்ட் மாஸ்டா்கள் தொடக்க சுற்றுகளில் கலந்து கொள்வா்.
உலக மகளிா் செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக், வி. பிரனவ், அரவிந்த் சிதம்பரம், ஆகியோரும் இதில் பங்கேற்று ஆடினா்.
கிரேக்க வீரா் நிகோலஸ், ஜொ்மனியின் மத்தியாஸ் பில்பாம், டச்சு ஜிஎம் பெஞ்சமின்போக் ஆகியோரும் பங்கேற்கின்றனா்.
இந்தியா ரைசிங் இறுதிச் சுற்று மும்பையில் நடைபெறும். மொத்த பரிசுத் தொகை ரூ.27.5 லட்சம் ஆகும். பிளே ஆஃப் சுற்றுக்குபின் இறுதியில் வெல்பவா் பாரீஸில் நடைபெறவுள்ள ஈ ஸ்போா்ட்ஸ் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவாா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










