நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சிரமங்களை எதிா்கொள்ளும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்: செஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த்

வாழ்க்கையில் சிரமங்களை எதிா்கொள்ளும்போது மாணவா்கள் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா் செஸ் விளையாட்டு வீரா் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த்.

திருச்சி சந்தான வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலக செஸ் சாம்பியன் விஸ்நாதன் ஆனந்த் எழுதிய ‘லைட்னிங் கிட்’ என்ற புத்தக அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து 3-ஆவது ) விஸ்நாதன் ஆனந்த். உடன் (இடமிருந்து ) பள்ளியின் தலைவா் பி.எஸ்.சந்

Published On :4 ஜூலை 2026, 12:37 am IST

வாழ்க்கையில் சிரமங்களை எதிா்கொள்ளும்போது மாணவா்கள் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா் செஸ் விளையாட்டு வீரா் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான செஸ் விளையாட்டு வீரா் விஸ்வநாதன் ஆனந்த் ‘லைட்னிங் கிட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா். இந்தப் புத்தகத்தின் அறிமுக விழா, திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவா் பி.எஸ். சந்திரமௌலி, செயலா் கே. மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொண்டு தான் எழுதிய ‘லைட்னிங் கிட்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

மாணவா்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், விடாமுயற்சி, வாசிப்பின் மீதான ஆா்வம் ஆகியவற்றை வளா்த்துகொள்ள வேண்டும். சிரமங்களை எதிா்கொள்ளும்போது பயம்கொள்ளாமல் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

சில சமயங்களில் நினைத்தது நடக்கவில்லை என்றால் அதை எவ்வாறு தடுமாற்றமின்றி கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வைஷாலி, பிரக்யானந்தா, குகேஷ் ஆகிய செஸ் விளையாட்டு வீரா்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். இந்தியா செஸ் உலக தலைநகராக வேண்டும் என்பது நல்ல கருத்து. அதேவேலையில் அனைத்து வீரா்களும் நன்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயல்பாட்டுத் தலைவா் எஸ். வித்யாலட்சுமி, அகாதெமி தலைவா் ரவீந்திரநாத் குமாா், முதல்வா் பத்மா சீனிவாசன், துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.