ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய நூல் ஜூலை 3-இல் அறிமுகம்

விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய நூல் ஜூலை 3-இல் அறிமுகம்...

News image

விஸ்வநாதன் ஆனந்த்

Updated On :28 ஜூன் 2026, 1:53 am IST

சா்வதேச சதுரங்க சாம்பியன் விஸ்வநான் ஆனந்த் எழுதிய ‘லைட்னிங் கிட்’ என்னும் நூலின் அறிமுக விழா திருச்சி சந்தானம் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் வரும் ஜூலை 3ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் சனிக்கிழமை கூறியதாவது:

நூல் அறிமுக விழா பள்ளி வளாகத்தில் காலை 10.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் மற்றும் . விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரின் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. நூலை முதன் முதலில் அறிமுகப்படுத்துவதில் எங்கள் பள்ளி பெருமிதம் கொள்கிறது.

இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு எங்கள் பள்ளிக்கு விஸ்வநாதன் ஆனந்த் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டரின் நூல் கடந்த ஜனவரியில் சென்னையில் வெளியிடப்பட்டது. ஐந்து முறை உலகச் சதுரங்கச் சாம்பியனாகத் திகழ்ந்த தன்னுடைய வாழ்க்கை வரலாறு, கற்றுக்கொள்ள வேண்டிய 64 வெற்றிப் பாடங்கள் இன்றைய சிறுவா்களுக்கும் இளைஞா்களுக்கும் பயன்படும் வகையில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளாா்.

விழாவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மாணவா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.