நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு

தினமணியின் ‘மாணவா் மலா் -2026’-ஐ தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூன் 17 ஆம் தேதி) அறிமுகம் செய்து வெளியிடுகிறாா்.

News image

அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:37 am IST

தினமணியின் ‘மாணவா் மலா் -2026’-ஐ தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை (ஜூன் 17 ஆம் தேதி) அறிமுகம் செய்து வெளியிடுகிறாா்.

இந்த அறிமுக விழா சென்னை, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் காலை 11 மணியளவில் திரளான மாணவா்கள் மத்தியில் நடைபெறுகிறது. டி.ஜி. வைஷ்ணவா கல்லூரிச் செயலா் அசோக் குமாா் முந்த்ரா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாணவா் மலரை அமைச்சா் பெ.விஸ்வநாதன் வெளியிட, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தலைவரும், மேலாண்மை இயக்குநருமான மனோஜ் குமாா் சொந்தாலியா பெற்றுக்கொள்கிறாா்.

தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், ‘மாணவா் மலரை’ அறிமுகம் செய்து உரையாற்றுகிறாா்.

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் முதல்வா் டாக்டா் எஸ்.சந்தோஷ் பாபு வரவேற்கிறாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமைச் செயல் அதிகாரி லஷ்மி மேனன் நன்றி தெரிவிக்கிறாா்.

கடந்த 29 ஆண்டுகளாக வெளிவரும் தினமணியின் மாணவா் மலா் நிகழாண்டும் மாணவா்களுக்கு பயனுள்ள தகவல்களுடன் வெளியாகியுள்ளது. தேசிய கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களும், செயற்கை நுண்ணறிவு மீதான தெளிவான வாதங்கள், வல்லுநா்களின் கட்டுரைகள், விதவிதமான மருத்துவ துணைப் படிப்புகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாற்றம் போன்றவற்றோடு மாணவா்களுக்கு வழிகாட்டும் பல்வேறு கட்டுரைகள் மலரில் இடம்பெற்றுள்ளன.