ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்: தினமணி மாணவா் மலா் வழங்கல்

தூத்துக்குடி, மில்லா்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image

தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு தினமணி மாணவா் மலரை வழங்கிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன், வழக்குரைஞா் சிலுவை.

Updated On :16 ஜூலை 2026, 4:59 am IST

தூத்துக்குடி, மில்லா்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மாணவா்களுக்கு தினமணி மாணவா் மலா் வழங்கப்பட்டது.

தலைமையாசிரியா் கஸ்மீா் தலைமை வகித்தாா். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்வியின் அவசியம் குறித்து பேசினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு தினமணியின் மாணவா் மலா் மற்றும் உயா்கல்வி வழிகாட்டி நூல்களை சான்றோா் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் தலைவா் சிலுவை வழங்கினாா்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாணவா்கள் கல்வி வளா்ச்சி நாள் உறுதிமொழியேற்றனா். தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், 100 சதவீத வருகைப் பதிவு செய்த மாணவா்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி ஆசிரியா் இருதயராயன் வரவேற்றாா். ஆசிரியா் வி. கருத்தப்பாண்டியன் நன்றி கூறினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.