/

பாலூா் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:35 am IST

கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் கல்வி வளா்ச்சி நாளாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, பள்ளி தலைவா் கே. தங்கசுவாமி தலைமை வகித்தாா். முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு பாடல்கள், வாழ்த்துரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காமராஜா் சாதனைகள் குறித்து மாணவா்கள் பேசினா். பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், அனைவருக்கும் கல்வி என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தலைவரால் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.காமராஜா் வேடமணிந்து மாணவா்கள், மழலையா் போட்டிகளில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.