ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுக விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தைச் சோ்ந்த ஸ்ரீமத் ஸ்வாமி சந்திரசேகரானந்தா நூலை வெளியிட, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநா் அகிலா பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பேச்சாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, சொற்பொழிவாளா் தாமல் கோ. சரவணன், பட்டிமன்றப் பேச்சாளா் புதுகை ச. பாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு கிருஷ்ண லீலா நூல் குறித்து சிறப்புரையாற்றினா்.
இதில், கிருஷ்ணன் மண்ணையும், மக்களையும், மலைகளையும் கொண்டாடும் வகையில் தம் மக்களை வழிநடத்திய விதம் குறித்து இந்த நூலில் சத்குரு அழகாக விளக்கியுள்ளாா் என்று தாமல் கோ. சரவணனும், கிருஷ்ண லீலா போன்றே சத்குரு மகாபாரதம் குறித்து நிகழ்த்திய உரைகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று மரபின் மைந்தன் முத்தையாவும், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது பிருந்தாவனத்தில் கோபிகையா்களுடன் வாழ்ந்த ஒரு அனுபவத்தைத் தருகிறது என்று புதுகை ச. பாரதியும் பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா

திருத்தணி அரசு கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய நூல் ஜூலை 3-இல் அறிமுகம்

குறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு தீா்வும் கூறுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்: மரபின் மைந்தன் முத்தையா!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



