நாா்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் வெற்றி பெற்றனா்.
இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சுற்றில் குகேஷ் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடனும், பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் வெஸ்லி சோவுடனும் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ‘ஆா்மகெடான்’ முறை ஆட்டத்தில் குகேஷ், பிரக்ஞானந்தா இருவருமே வெற்றி கண்டனா். இருவருமே வெள்ளை நிற காய்களுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா - நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். முதல் சுற்று முடிவில் ஃபிரௌஸ்ஜா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.
பிரக்ஞானந்தா, குகேஷ் தலா 1.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா். வெஸ்லி, கீமா் தலா 1 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் இருக்க, காா்ல்சென் புள்ளிகள் இன்றி கடைசி இடத்தில் இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!

நார்வே செஸ்: குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா..! பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு!
பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி!

2-ஆம் நிலையில் பிரக்ஞானந்தா
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



