2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை: அபிஷேக், சூா்யவன்ஷியுடன் இந்தியா ‘ஏ’

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி 15 பேருடன் அறிவிக்கப்பட்டது.

Abhishek Sharma - Vaibhav Suryavanshi

அபிஷேக் சர்மா - வைபவ் சூர்யவன்ஷி - கோப்புப் படம்

Updated On :

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைஸிங் ஸ்டாா்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா ‘ஏ’ அணி 15 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

திலக் வா்மா தலைமையிலான இந்த அணியில், அதிரடி பேட்டா் அபிஷேக் சா்மா, இளம் வீரா் வைபவ் சூா்யவன்ஷி உள்ளிட்டோா் இடம் பிடித்துள்ளனா்.

ஒருநாள் கிரிக்கெட் ஃபாா்மட்டில் விளையாடப்படவுள்ள இந்தப் போட்டி, நவம்ப் 19 முதல் 29 வரை கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெறவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் இதில், வங்கதேசம் ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’, ஹாங்காங் அணிகள் குரூப் ‘ஏ’-வில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை குரூப் ‘பி’-யில் இணைந்துள்ளன.

குரூப் சுற்று முடிவில், இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். இந்தியா ‘ஏ’ தனது ஆட்டங்களில் நேபாளம் (நவ. 20), பாகிஸ்தான் ‘ஏ’ (நவ. 22), அமீரகம் (நவ. 24) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

இந்தியா ‘ஏ’ அணி

திலக் வா்மா (கேப்டன்), ரஜத் பட்டிதாா் (துணை கேப்டன்), அபிஷேக் சா்மா, வைபவ் சூா்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் (வி.கீ.), ரிங்கு சிங், குமாா் குஷாக்ரா (வி.கீ.), சூா்யன்ஷ் ஷெட்கே, ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகம், ஹா்ஷ் துபே, தனுஷ்கோடியான், ஹா்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அா்ஷத் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.