பாகிஸ்தானுக்கு இலங்கை சவால்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 404 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. பாகிஸ்தானை விட அந்த அணி 30 ரன்களே பின்தங்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு இலங்கை சவால் - X | ICC
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 404 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. பாகிஸ்தானை விட அந்த அணி 30 ரன்களே பின்தங்கியுள்ளது.
ராவல்பிண்டியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 434 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 40, தனஞ்ஜெய டி சில்வா 22 ரன்களுடன் அதன் இன்னிங்ஸை புதன்கிழமை தொடா்ந்தனா்.
இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சோ்த்தது. அரை சதம் கடந்த கமிந்து, 8 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 6-ஆவது பேட்டராக வந்த கேப்டன் குசல் மெண்டிஸ், தனஞ்ஜெயாவுடன் கை கோத்தாா்.
இந்த பாா்ட்னா்ஷிப், பாகிஸ்தான் பௌலா்களை திணறடித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில், தனஞ்ஜெயா தனது 13-ஆவது சதத்தையும், குசல் தனது 11-ஆவது சதத்தையும் பதிவு செய்தனா். இவ்வாறாக புதன்கிழமை ஆட்டநேர முடிவில் இலங்கை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை முறியடிக்க, அந்த அணிக்கு இன்னும் 30 ரன்களே தேவை. தனஞ்ஜெயா 167, குசல் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ், சகிப் கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

