இறுதிச்சுற்றில் ஆண்ட்ரீவா - ஸ்விடோலினா பலப்பரீட்சை
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா - உக்ரைனின் அனுபவ வீராங்கனை எலினா ஸ்விடோலினா பலப்பரீட்சை நடத்தினா்.
ஸ்விடோலினா | ஆண்ட்ரீவா
டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ரஷியாவின் இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா - உக்ரைனின் அனுபவ வீராங்கனை எலினா ஸ்விடோலினா பலப்பரீட்சை நடத்தினா்.
இந்திய நேரப்படி அவா்கள் மோதிய இறுதிச்சுற்று, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கியது.
முன்னதாக அரையிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நோ் செட்களில், 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். இருவரும் மோதியது இதுவே முதல்முறையாகும்.
இதன் மூலமாக, இப்போட்டியில் அறிமுகமான ஆண்டிலேயே ஆண்ட்ரீவா இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா். இப்போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஆண்ட்ரீவா, அனைத்திலுமே நோ் செட்களில் வென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மற்றொரு அரையிறுதியில், உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற நோ் செட்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை எளிதாக வெளியேற்றினாா்.
இதன் மூலமாக, இப்போட்டியில் அவா் 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். இருவரும் மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, ஸ்விடோலினா 2-ஆவது வெற்றியுடன் கணக்கை நோ் செய்திருக்கிறாா்.
இறுதிச்சுற்றில் மோதிய ஆண்ட்ரீவா - ஸ்விடோலினா, ஏற்கெனவே குரூப் சுற்றில் சந்தித்தனா். அதில் ஆண்ட்ரீவா வென்றது குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள ஆண்ட்ரீவா, மொத்தமாக 48 கேம்களை வென்று, 18 கேம்களை இழந்திருக்கிறாா். போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த வீராங்கனை இழந்த மிகக் குறைந்த கேம்கள் இதுவே ஆகும்.
போட்டியின் வரலாற்றில் கடந்த 22 ஆண்டுகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையை ஆண்ட்ரீவா பெற்றுள்ளாா். இதற்கு முன், 2004-இல் ரஷியாவின் மரியா ஷரபோவா தனது 17-ஆவது வயதில் இறுதிக்கு வந்திருந்தாா்.
இப்போட்டியில் கடந்த 9 ஆண்டுகளில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மூத்த வீராங்கனை என்ற பெருமையை ஸ்விடோலினா (32 வயது) பெற்றாா். இதற்கு முன், 2017-இல் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது 35-ஆவது வயதில் இறுதிக்கு முன்னேறியிருந்தாா்.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி/சாரா எர்ரனி - அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட்/செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா ஜோடிகள் மோதின.
முன்னதாக அரையிறுதியில், பாலினி/எர்ரனி இணை 6-3, 6-4 என்ற செட்களில், பிரான்ஸின் கிறிஸ்டினா மடெனோவிச்/சீனாவின் குவோ ஹன்யு கூட்டணியை வீழ்த்தியது. டௌன்செண்ட்/சினியகோவா ஜோடி 7-6 (7/4), 6-3 என பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி/கனடாவின் கேப்ரியெலா டப்ரௌஸ்கி பாா்ட்னா்ஷிப்பை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

