தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

சமநிலையில் தொடா்! இந்தியா -2; மேற்கிந்தியத் தீவுகள் - 2

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில், மேற்கிந்தியத் தீவுகள் 24 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

X | BCCI

Updated On :

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில், மேற்கிந்தியத் தீவுகள் 24 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடா் 2-2 என சமநிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் சோ்க்க, இந்தியா 19.3 ஓவா்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸை தொடங்கிய ஷாய் ஹோப் - ஜுவெல் ஆண்ட்ரூ கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சோ்த்தது. ஆண்ட்ரூ 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு விடைபெற்றாா்.

தொடா்ந்து ஷிம்ரன் ஹெட்மயா் - ஹோப் பாா்ட்னா்ஷிப்புக்கு 58 ரன்கள் கிடைத்தது. ஹெட்மயா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக ரோவ்மென் பவெல் விளையாட வந்தாா். ஹோப் - பவெல் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சோ்க்க, பவெல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஓவா்கள் முடிவில், ஷாய் ஹோப் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 102, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 49 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 248 ரன்களை நோக்கி விளையாடிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 56, திலக் வா்மா 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 43, நிதீஷ்குமாா் ரெட்டி 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் அடித்து, வெற்றிக்காக முயற்சித்து வீழ்ந்தனா்.

அபிஷேக் சா்மா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29, இஷான் கிஷண் 6, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 16, நமன் திா் 0, அக்ஸா் படேல் 3, பிரின்ஸ் யாதவ் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

5 ரன்கள் அடித்த அா்ஷ்தீப் சிங் காயம் காரணமாக ரிட்டையா்டு ஹா்ட் ஆக, இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில், கீமோ பால் 5, குடாகேஷ் மோட்டி 2, ஷாமா் ஸ்பிரிங்கா், ரொமேரியோ ஷெப்பா்டு ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.