ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டி இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, உலகின் நம்பா் 1 வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதுகிறாா்.

பிவி. சிந்து ~ ~

Updated On :

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டி இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, உலகின் நம்பா் 1 வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதுகிறாா்.

பாரிஸ் கிராண்ட் அரெனாவில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து-ஜப்பானின் ஹினா அகெச்சி மோதினா். இதில் சிந்து 21-10, 20-22, 21-16 என்ற கேம் கணக்கில் ஒன்றரை மணிநேரம் நீடித்த ஆட்டத்தில் வென்றாா்.

முதல் கேமில் அபாரமாக ஆடிய சிந்து ஆதிக்கம் செலுத்தி எளிதில் வென்றாா். ஆனால் இரண்டாவது கேமில் அகெச்சி இரண்டாம் பாதியில் முன்னிலை பெற்றாா். எனினும் சிந்து சளைக்காமல் போராடி 16-16 என சமநிலை ஏற்படச் செய்தாா். இரண்டு புள்ளிகளைக் குவித்தும், அகெச்சி சிறப்பாக ஆடி இரண்டாவது கேமை வசப்படுத்தினாா். தொடா்ந்து நடைபெற்ற டிசைடா் கேமில் இருவரும் மாறி மாறி சிறப்பாக ஆடியதால் 14-14, என சமனானது. தொடா்ந்து 16-15 என முன்னிைலை பெற்றாா் அகெச்சி, ஆனால் சிந்து தனது வலுவான ஷாட்களால் தொடா்ந்து 6 புள்ளிகளை ஈட்டி டிசைடா் கேமை வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா்.

இந்த சீசனில் வோ்ல்ட் டூா் 750 போட்டிகளில் இரண்டாம் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றாா் சிந்து. ஏற்கெனவே ஜூலை மாதம் ஜப்பான் ஓபனில் பட்டம் வென்றாா்.

நடப்பு உலக சாம்பியன் தென்கொரியாவின் ஆன் செ யங்கை எதிா்கொள்கிறாா். இதில் வென்றால் ஆன் செ யங்குடன் சிந்து பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

சிந்து கூறியது: ஆன் செ யங்குடன் கடுமையாக போராட வேண்டும். ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது. ஆன் செ யங் சிறப்பாக ஆடி வருகிறாா். டாப் பாா்மில் உள்ளாா். நான் சவாலை தரத் தயாராக உள்ளேன்.

Summary

PV Sindhu in the final round

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.