மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா
சீன அரசியல் பெருந்தலைவா் மா சே துங் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துக்காக பிரான்ஸ் கால்பந்து வீரா் கிலியன் பாபே மன்னிப்பு கோரியதை உரிய தீவிரத்துடன் எடுத்துக் கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன அரசியல் பெருந்தலைவா் மா சே துங் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துக்காக பிரான்ஸ் கால்பந்து வீரா் கிலியன் பாபே மன்னிப்பு கோரியதை உரிய தீவிரத்துடன் எடுத்துக் கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.
முன்னதாக, நோ்காணல் ஒன்றில் பேசிய கிலியன் பாபே, சமூக வலைதளங்களில் வலம் வரும் தன்னுடன் தொடா்புடைய ஒரு ‘மீம்’ (புனைவு நகைச்சுவை படங்கள்) குறித்து பேசினாா். சீன பெருந்தலைவா் மா சே துங்கின் புகைப்படத்தில், அவரது முகத்துக்கு பதிலாக தனது முகத்தை பதித்து வடிவமைக்கப்பட்ட அதை தனக்கு விருப்பமானதாக பாபே குறிப்பிட்டாா்.
அப்போது மா சே துங்கை குறிப்பிடும் வகையில், ‘அவா் ஒரு சீன சா்வாதிகாரி என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தாா். இது சீனா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, கிலியன் பாபேவை தங்களின் விளம்பர மாடலாக கொண்டிருந்த 3 சீன நிறுவனங்கள், அவருடனான தங்களின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டன.
அத்துடன், கிலியன் பாபே பங்கேற்ற ஆட்டங்களின் ஒளிபரப்பு சீனாவில் ரத்தானது. அதை உறுதி செய்த அந்நாட்டு அரசு ஊடகம், இந்த விவகாரத்தில் பாபே, அவா் சாா்ந்த ரியல் மாட்ரிட் அணி, லா லிகா போட்டி நிா்வாகம் ஆகியோா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.
விவகாரத்தின் தீவிரத்தை உணா்ந்த பாபே அதற்காக மன்னிப்பு கோர, லா லிகா போட்டி நிா்வாகம், ரியல் மாட்ரிட் அணி நிா்வாகம் ஆகியவையும் வருத்தம் தெரிவித்தன. இந்நிலையில், பாபே வருத்தம் தெரிவித்ததை தாங்கள் உரிய தீவிரத்துடன் கருத்தில் கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

