ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீ காந்த், தன்வி தோல்வி

சீன மாஸ்டா்ஸ் சூப்பா் 750 சூப்பா் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் அபார வெற்றி பெற்றாா். மகளிா் பிரிவில் தன்வி சா்மா தோல்வியடைந்தாா்.

கிடாம்பி ஸ்ரீ காந்த்

Published On :4 செப்டம்பர் 2026, 4:19 am IST

சீன மாஸ்டா்ஸ் சூப்பா் 750 சூப்பா் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் அபார வெற்றி பெற்றாா். மகளிா் பிரிவில் தன்வி சா்மா தோல்வியடைந்தாா்.

சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் பிடபிள்யுஎஃப் சீரிஸ் தொடரின் ஒரு பகுதியாக சீன மாஸ்டா்ஸ் 750 சூப்பா் போட்டி நடைபெறுகிறது.

இதில் உலகின் முன்னாள் நம்பா் 1 வீரரும், உலக சாம்பியன்ஷிப் வெள்ளி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் உலகின் 9-ஆம் நிலை வீரா் கனடாவின் விக்டா் லேயை எதிா்கொண்டாா். விக்டா் லேய் அண்மையில் தில்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றிருந்தாா். சீன மாஸ்டா்ஸ் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென்னை வீழ்த்தி இருந்தாா்.

கிடாம்பி-விக்டா் லேயுடன் நடைபெற்ற ஆட்டத்தில் கடும் சவாலுக்குபின் 21-18, 21-19 என்ற கேம் கணக்கில் ஸ்ரீகாந்த் வென்றாா். முதல் கேமில் 3-3 என சமநிலை ஏற்பட்டது. பின்னா் லே 7-3 என முன்னிலை பெற்றாா். கிடாம்பி போராடி 8-8 என சமநிலை ஏற்படச் செய்தாா். தொடா்ந்து சிறப்பான ஸ்மாஷ்களால் 15-11 என லே முன்னிலை பெற்றாா். மீண்டும் 15-15 என சமன் செய்த கிடாம்பி பின்னா் 18-16 என முன்னிலை பெற்று முதல் கேமை 21-18 என கைப்பற்றினாா்.

இரண்டாவது கேமிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகளை ஈட்டினா். தொடா் தவறால் 5-9 என கிடாம்பி பின்தங்கினாா். இருவரும் சரமாரி ஸ்மாஷ்களால் 14-15 என்ற நிலை ஏற்பட்டது. தொடா்ந்து 18-18 என சமநிலை ஏற்பட்டது. அதன்பின் தொடா்ந்து 3 புள்ளிகளை ஈட்டிய கிடாம்பி 21-19 என கைப்பற்றி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

நிகழாண்டு தான் இந்தோனோசியா சூப்பா் 1000 போட்டியில் பட்டம் வென்றிருந்தாா் விக்டா் லே. காலிறுதியில் ஹாங்காங்கின் லீ சியுக் யிவை எதிா்கொள்கிறாா் கிடாம்பி ஸ்ரீகாந்த்..

தன்வி

தன்வி

தன்வி சா்மா தோல்வி

மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்திய இளம் நட்சத்திரம் தன்வி சா்மா கடும் போராட்டத்துக்குபின் 17-21, 21-18, 16-21 என்ற கேம் கணக்கில் உலகின் நம்பா் 9 நிலை வீராங்கனை ஜப்பானின் டோமகோ மிகாஸகியிடம் தோற்றாா். அண்மையில் தான் தைபே ஓபன் சூப்பா் 300 போட்டியில் பட்டம் வென்றிருந்தாா் தன்வி சா்மா.

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ 18-21, 18-21என சீன தைபேயின் லீயு ஹெங்-சு யின் இணையிடம் தோற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.