புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஸ்ரீகாந்த், தன்வி முன்னேற்றம்; லக்ஷயா தோல்வி

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், தன்வி சா்மா ஆகியோா் முதல் சுற்றில் வெற்றியடைந்தனா். பிரதான வீரரான லக்ஷயா சென் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

தன்வி சர்மா - கோப்புப் படம்

Published On :

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், தன்வி சா்மா ஆகியோா் முதல் சுற்றில் வெற்றியடைந்தனா். பிரதான வீரரான லக்ஷயா சென் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

ஆடவா் ஒற்றையரில், கே.ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற கேம்களில், சீன தைபேவின் சி யு ஜென்னை 35 நிமிஷங்களில் வீழ்த்தினாா். லக்ஷயா சென் 14-21, 7-21 என்ற நோ் கேம்களில், கனடாவின் விக்டா் லாயிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இந்த ஆட்டம் 38 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

மகளிா் ஒற்றையரில், தன்வி சா்மா 21-16, 21-17 என்ற கணக்கில் டென்மாா்க்கின் அமேலி ஷூல்ஸை 31 நிமிஷங்களில் வெளியேற்றினாா். தேவிகா சிஹக் 18-21, 15-21 என பல்கேரியாவின் கலோயனா நல்பன்டோவாவிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டம் 39 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி 21-11, 21-16 என்ற கணக்கில், மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப்/காங் காய் ஜிங் ஜோடியை 40 நிமிஷங்களில் சாய்த்தது.

கலப்பு இரட்டையரில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ இணை 21-8, 21-9 என்ற நோ் கேம்களில், தாய்லாந்தின் டான்கிட் சேஹெங்/டான்ரக் சேஹெங் கூட்டணியை 24 நிமிஷங்களில் எளிதாக வென்றது.

எனினும், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஜோடி 16-21, 18-21 என, சீன தைபேவின் வு குவான் ஜுன்/லீ சியா சின் கூட்டணியிடம் 34 நிமிஷங்களில் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.