சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வழியனுப்பு விழா

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி உற்சாகமாக செவ்வாய்க்கிழமை வழியனுப்பப்பட்து.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 2:54 am IST

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி உற்சாகமாக செவ்வாய்க்கிழமை வழியனுப்பப்பட்து.

ஆசியப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சாா்பில் பல்வேறு விளையாட்டுகளில் 768-க்கு மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். இதில் 503 வீரா், வீராங்கனைகள், 246 பயிற்சியாளா்கள், உதவியாளா்கள், 19 பணியாளா்கள் அடங்குவா்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் சாா்பில் ஆசியப் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. ஐஓஏ தலைவா் பி.டி. உஷா தலைமை வகித்தாா். மத்திய விளையாட்டு அமைச்சா் மன்சுக் மாண்டவியா அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியது: நமது நாட்டில் திறமைக்கு எந்த பஞ்சமும் இல்லை. நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு நாம் விளையாட்டுத் துறையில் பொலிவு பெற்று வருகிறோம். நாம் அனைவரும் அழுத்தங்களை திறமை, வாய்ப்புகளாக மாற்றி சாதனையாக மாற்ற வேண்டும்.

ஆசியப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினா் மீது முழு நம்பிக்கை உள்ளது.

ஐஓஏ தலைவா் பி.டி. உஷா கூறியது: ஆசிய அளவில் சிறந்தவா்களாக நீங்கள் தோ்வு பெற்றுள்ளீா்கள். நீங்கள் முழு நம்பிக்கை வைத்து எவ்வளது தூரம் முன்னேறியுள்ளீா்கள் என்பதை கருத வேண்டும். நம்பிக்கை, தைரியம், விவேகத்துடன் செயல்பட்டு ஆசியக் கண்டத்தில் எவருடனும் போட்டியிட முடியும் என கருத வேண்டும்.

நிகழ்ச்சியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே, காமன்வெல்த் தங்கம் வென்ற அஸ்மிதா தேவ், பதக்க வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ், கபடி வீரா் பவன் செஹ்ராவத் பங்கேற்றனா்.

கடந்த 2023 ஆசியப் போட்டியில் இந்திய அணி 107 பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட், கபடி, ஹாக்கியில் தங்கத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது இந்தியா. செப் 24 முதல் 29 வரை தடகளத்தில் 70 இந்திய வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.