
கேப்டனாக 150-வது போட்டி... ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் அபார வெற்றி!
இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கௌர் 150-வது போட்டியில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் - படம் | ஐசிசி
இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கௌர் 150-வது போட்டியில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியை 150-வது போட்டியில் கேப்டனாக வழிநடத்திய ஹர்மன்பிரீத் கௌர் அணிக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக இருந்தது. நேற்றையப் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். பந்துவீச்சாளர்கள் அவர்களது திட்டங்களை மிகவும் சரியாக செயல்படுத்தினார்கள்.
ð¨ ð ð¶ð¹ð²ððð¼ð»ð² ð ð¼ðºð²ð»ð, ð ð¼ð»ððºð²ð»ðð®ð¹ ð ð¼ðºð²ð»ð ð¨
— BCCI Women (@BCCIWomen) September 5, 2026
Harmanpreet Kaur becomes the first cricketer to captain a side in 1ï¸â£5ï¸â£0ï¸â£ T20Is. ð ð
Updates â¶ï¸ https://t.co/1WHHWPMe2o#TeamIndia | #WomensAsiaCup | @ImHarmanpreet pic.twitter.com/WrdFlp7kcH
அணியில் உள்ள அனைவரும் நன்றாக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்து விளையாடவுள்ள இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய அணியை 150 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்துவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், இந்த பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், அவர்கள் அனைவரின் ஆதரவும் இல்லையென்றால், இது சாத்தியமில்லை என்றார்.
Summary
Harmanpreet Kaur successfully led the Indian team in her 150th match as captain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





