இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது தங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாகவும், இந்த வெற்றி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றுவிட்டதால் மட்டும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் எனக் கூற மாட்டேன். ஏனெனில், ஒவ்வொரு டெஸ்ட் போட்டி வெற்றியும் மிகவும் சிறப்பானது. இலங்கைக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறோம். அணியில் பல வீரர்கள் இதற்கு முன் இலங்கையில் விளையாடியது கிடையாது. இந்த தொடருக்கு முன்னதாக கூறியதுபோல, இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.
முதல் போட்டியில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இதே நம்பிக்கையுடன் கொழும்புவில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளோம். அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப் பெரிய தொடரில் விளையாடவுள்ளோம். அதனால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழலைப் புரிந்து கொண்டு பேட்டர்கள் சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது. அதில், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் முதல் இன்னிங்ஸில் 82 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team vice-captain KL Rahul has stated that the victory in the first Test against Sri Lanka has boosted their confidence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்டில் மூன்று இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறதா இந்திய அணி?

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் முன்பே சிக்கலில் இந்தியா!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கவுள்ள பிசிசிஐ; பும்ரா இடம்பெறுவாரா?
விடியோக்கள்

பைத்தியம் என்கிறார்! அடிக்க வருகிறார்! பேரவையில் காரசார விவாதம்! | TN Assembly | TVK




