கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையாக உழைக்கும் முகமது ஷமி: இஷான் கிஷன்

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கடுமையாக உழைப்பதாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

Mohammed Shami

முகமது ஷமி (கோப்புப் படம்)

Published On :5 செப்டம்பர் 2026, 6:32 pm IST

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கடுமையாக உழைப்பதாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான முகமது ஷமி துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் ஈஸ்ட் ஸோன் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு துலீப் டிராபி தொடரில் சென்ட்ரல் ஸோன் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெடுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது அபார பந்துவீச்சு ஈஸ்ட் ஸோன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவியது.

இந்த நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக முகமது ஷமி கடுமையாக உழைப்பதாக ஈஸ்ட் ஸோன் அணியின் கேப்டன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிகவும் சிறந்த பந்துவீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர் என நினைக்கிறேன். ஆட்டம் குறித்து அவருக்கு மிகுந்த அனுபவம் இருக்கிறது. பெங்கால் அணிக்காக விளையாட ஆரம்பித்ததிலிருந்தே அவர் நன்றாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார்.

வயது குறித்து கருத்து தெரிவிப்பது மிகவும் கடினம் என நினைக்கிறேன். வயது என்பது வெறும் எண் மட்டுமே என நான் நினைக்கிறேன். அவர் கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தால், வயது என்பது பெரிய விஷயமல்ல. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற வேட்கை முகமது ஷமியிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் என்னைவிட கடுமையாக உழைக்கிறார் என்றார்.

முகமது ஷமி கடைசியாக இந்திய அணிக்காக கடந்த 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Summary

Ishan Kishan has stated that fast bowler Mohammed Shami is working hard to regain his place in the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.