
பேலந்தோர்: சிறந்த வீரருக்கான 30 போட்டியாளர்களில் மெஸ்ஸியின் பெயர் சேர்ப்பு!
சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பேலந்தோர் விருதுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ள 30 போட்டியாளர்கள் குறித்து...

பேலந்தோர்: சிறந்த வீரருக்கான போட்டியாளர்கள் பட்டியல். - படங்கள்: எக்ஸ் / பேலந்தோர்.
சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பேலந்தோர் விருதுக்கான (தங்கப் பந்து) பரிந்துரையில் இடம்பெற்றுள்ள 30 போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் கால்பந்துக்கென பிரத்யேகமாக வெளியாகும் பிரான்ஸ் ஃபுட்கால் என்ற மாத இதழின் சார்பாக பேலந்தோர் விருது அளிக்கப்படுகிறது. அதில பல வகைகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.
தற்போது, சிறந்த வீரருக்கான 30 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளன. அதில் அதிக முறை (8 முறை) பேலந்தோர் விருது வென்ற லியோனல் மெஸ்ஸியின் பெயர் 17ஆவது முறையாக இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது அவரது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களில் (2024, 2025) வெளியிட்ட போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெறாத மெஸ்ஸி தற்போது இணைந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பேலந்தோர் - சிறந்த வீரருக்கான போட்டியாளர்கள்
1. லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா, இன்டர் மியாமி)
2. மைக்கேல் ஒலிஸே (பிரான்ஸ், பயர்ன் மியூனிக்)
3. ஜாவோ நெவிஸ் ( போர்ச்சுகல், பிஎஸ்ஜி)
4. வில்லியம் பாச்சோ (ஈக்குவடார், பிஎஸ்ஜி)
5. ரோட்ரி (ஸ்பெயின், மான்செஸ்டர் சிட்டி/ பார்சிலோனா)
6. டெக்லான் ரைஸ் (இங்கிலாந்து, ஆர்செனல்)
7. ஜூலியன் குவினோஸ் (மெக்சிகன், அல்குவாதிஸ்)
8. நுனோ மெண்டிஸ் (போர்ச்சுகல், பிஎஸ்ஜி)
9. கிளியன் எம்பாபே (பிரான்ஸ், ரியல் மாட்ரிட்)
10. லௌடாரா மார்டினெஸ் (ஆர்ஜென் டீனா, இன்டர் மிலன்)
11. சதியோ மானே (செனகல், அல்-நாசர்)
12. மார்கினோஸ் (பிரேசில், பிஎஸ்ஜி)
13. க்வாராட்ஸ்கெலியா (ஜெர்மனி, பிஎஸ்ஜி)
14. லமின் யமால் (ஸ்பெயின், பார்சிலோனா)
15. ஹகிமி (மொராக்கோ, பிஎஸ்ஜி)
16. ஹாரி கேன் (இங்கிலாந்து, பயர்ன் மியூனிக்)
17. கேப்ரியல் (பிரேசில், ஆர்செனல்)
18. எர்லிங் ஹாலண்ட் ( நார்வே, மான்செஸ்டர் சிட்டி)
19. ப்ரூனோ பெர்னாண்டஸ் (போர்ச்சுகல், மான்செஸ்டர் யுனைடெட்)
20. லூயிஸ் டையஸ் (கொலம்பியா, பயர்ன் மியூனிக்)
21. டெம்பேலே (பிரான்ஸ், பிஎஸ்ஜி)
22. குகுரேலா (ஸ்பெயின், செல்ஸி/ரியல் மாட்ரிட்)
23. பௌ குபார்சி (ஸ்பெயின், பார்சிலோனா)
24. ஜூட் பெல்லிங்கம் (இங்கிலாந்து, ரியல் மாட்ரிட்)
25. ஃபேபியன் ரூயிஸ் (ஸ்பெயின், பிஎஸ்ஜி)
26. ஃபெர்ரன் டோரஸ் (ஸ்பெயின், பார்சிலோனா/ பிஎஸ்ஜி)
27. வில்லியம் சலிபா (பிரான்ஸ், ஆர்செனல்)
28. டாயோட் உபமெகானோ (பிரான்ஸ், பயர்ன் மியூனிக்)
29. வினிசியஸ் ஜூனியர் (பிரேசில், ரியல் மாட்ரிட்)
30. விடினா (போர்ச்சுகல், பிஎஸ்ஜி)
OUR 2026 MEN'S BALLON D'OR NOMINEES! #ballondor pic.twitter.com/GQFsH5u5lO
— Ballon d'Or (@ballondor) September 8, 2026
Summary
Ballon d'Or: Messi included among the 30 nominees for the best player award!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




