சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பேலந்தோர்: சிறந்த வீராங்கனைக்கான 30 போட்டியாளர்கள் அறிவிப்பு! அய்டானா பொன்மட்டி இல்லை!

சிறந்த கால்பந்து வீராங்கனைக்கு வழங்கப்படும் பேலந்தோர் விருதுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ள 30 போட்டியாளர்கள் குறித்து...

The 30 contenders for the Ballon d'Or for the best female player.

பேலந்தோர் சிறந்த வீராங்கனைக்கான 30 போட்டியாளர்கள். - படங்கள்: எக்ஸ் / பேலந்தோர்.

Published On :8 செப்டம்பர் 2026, 7:47 pm IST

பேலந்தோர் (தங்கப் பந்து) விருதுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ள 30 பேர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் கால்பந்துக்கென பிரத்யேகமாக வெளியாகும் பிரான்ஸ் ஃபுட்கால் என்ற மாத இதழின் சார்பாக பேலந்தோர் விருது அளிக்கப்படுகிறது. அதில பல வகைகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. அதில் மூன்று முறை பேலந்தோர் விருது வென்ற அய்டானா பொன்மட்டியின் பெயர் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

இந்தப் பட்டியலில் பார்சிலோனா, பயர்ன் மியூனிக், மான்செஸ்டர் சிட்டி, கதிஜா ஷா போன்ற கிளப்பில் விளையாடும் வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விருது வழங்கும் விழா வரும் அக்.26ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது. இத்துடன் இது 70ஆவது ஆண்டு விழா என்பதும் கவனிக்கத்தக்கது.

பேலந்தோர் - சிறந்த வீராங்கனைக்கான போட்டியாளர்கள்

செல்மா பச்சா (பிரான்ஸ் அணி, லியோன்ஸ் கிளப்), பார்பரா பாண்டா (சாம்பியா அணி, ஆர்லாண்டோ பிரைட் கிளப்), கிளாரா பூல் (ஜெர்மனி அணி, பயர்ன் மியூனிக் கிளப்), எஸ்மீ ப்ரூக்ட்ஸ் (நெதர்லாந்து அணி, எஃப்சி பார்சிலோனா கிளப்), மரியோனா கால்டென்டே (ஸ்பெயின் அணி, ஆர்சனல் கிளப்), ஸ்கார்லெட் கேம்பெரோஸ் (மெக்சிகோ அணி, கிளப் அமெரிக்கா), கெர்ஸ்டின் காஸ்பரிஜ் (நெதர்லாந்து அணி, மான்செஸ்டர் சிட்டி கிளப்), டெம்வா சவிங்கா (மலாவி அணி, கேன்சஸ் சிட்டி கரண்ட் கிளப்), கேட்டா கோல் (ஸ்பெயின் அணி, எஃப்சி பார்சிலோனா), மெல்ச்சி டுமோர்னே (ஹைதி அணி, லியோன்ஸ் கிளப்), கரோலின் கிரஹாம் ஹேன்சன் (நார்வே அணி, எஃப்சி பார்சிலோனா), அலெக்ஸ் கிரீன்வுட் (இங்கிலாந்து அணி, மான்செஸ்டர் சிட்டி கிளப்), பாட்ரி குய்ஜாரோ (ஸ்பெயின் அணி, எஃப்சி பார்சிலோனா), பெர்னிலே ஹார்டர் (டென்மார்க் அணி, பயர்ன் மியூனிக் கிளப்), யூயி ஹசகாவா (ஜப்பான் அணி, மான்செஸ்டர் சிட்டி கிளப்), ரோஸ் லாவெல்லே (அமெரிக்க அணி, கோதம் எஃப்சி), மாபி லியோன் (ஸ்பெயின் அணி, எஃப்சி பார்சிலோனா/லண்டன் சிட்டி), லோரெனா (பிரேசில், கேன்சஸ் சிட்டி கரன்ட்), மெல்வின் மலார்ட் (பிரான்ஸ் அணி, மான்செஸ்டர் யுனைடெட்/செல்சி கிளப்), மனகா மட்சுகுபோ (ஜப்பான் அணி, நார்த் கரோலினா கரேஜ்/செல்சி கிளப்), விவியான் மீடெமா (நெதர்லாந்து அணி, மான்செஸ்டர் சிட்டி கிளப்), ஈவா பஜோர் (போலந்து அணி, எஃப்சி பார்சிலோனா), கிளாடியா பினா (ஸ்பெயின் அணி, எஃப்சி பார்சிலோனா), அலெக்ஸியா புடெல்லாஸ் (ஸ்பெயின் அணி, எஃப்சி பார்சிலோனா/லண்டன் சிட்டி லயனஸ்), வெண்டி ரெனால்ட் (பிரான்ஸ் அணி, லியோன்ஸ் கிளப்), அலெசியா ரூசோ (இங்கிலாந்து அணி, ஆர்செனல் கிளப்), காதிஜா ஷா (ஜமைக்கா அணி, மான்செஸ்டர் சிட்டி கிளப்), மொமோகோ தனிகாவா (ஜப்பான் அணி, பயர்ன் மியூனிக் கிளப்), கரோலின் வெயிர் (ஸ்காட்லாந்து அணி, ரியல் மாட்ரிட்/ லியோன்ஸ் கிளப்), மற்றும் டெஸ்ஸா உல்லார்ட் (பெல்ஜியம் அணி, இன்டர் மிலன்/கோமோ கிளப்).

Summary

Announced the full list of 30 nominees for the 2026 Women's Ballon d'Or for the2025/26 season

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.