உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பிரீமியர் லீக்கின் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம்..! என்ஜோ பெர்னான்டஸ் சாதனை!

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் என்ஜோ பெர்னான்டஸை மான்செஸ்டர் சிட்டி அணி அதிக தொகைக்கு வாங்கியுள்ளது குறித்து...

Enzo Fernandez

என்ஜோ பெர்னான்டஸ் - படங்கள்: எக்ஸ் / மான்செஸ்டர் சிட்டி

Published On :2 செப்டம்பர் 2026, 3:19 pm IST

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் என்ஜோ பெர்னான்டஸை மான்செஸ்டர் சிட்டி அணி அதிக தொகைக்கு வாங்கியுள்ளது. இது பிரீமியர் லீக்கில் வரலாற்றில் சாதனையாக மாறியுள்ளது.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மிட்பீல்டரான என்ஜோ பெர்னான்டஸ் (25 வயது) 125 மில்லியன் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ.16,160 கோடி) மான்செஸ்டர் சிட்டி அணியில் ஐந்து ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் முன்னதாக என்ஜோ பெர்னான்டஸ் செல்ஸி அணியில் விளையாடி வந்தார். இதுதான் பிரீமியர் லீக்கில் வரலாற்றிலேயே புதிய சாதனையாக மாறியுள்ளது.

முன்னதாக, அலெக்சாண்டர் இசாக் நியூகேஸில் அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு இதே தொகைக்கு வாங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டீனா 2022 உலகக் கோப்பை வென்றபோது என்ஜோ பெர்னான்டஸ் அந்த அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அட்டாக்கிங் மிட்ஃபீல்டரான இவர் உலகக் கோப்பையில் 3 கோல்கள் அடித்துள்ளார்.

தொடக்கத்தில் என்ஜோ பெர்னான்டஸுக்கு 120 மில்லியன் பவுண்டு கொடுப்பதாக கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பெர்னான்டஸ் கூடுதலாக 5 மில்லியன் பவுண்ட் தந்தால் மட்டுமே சம்மதம் தெரிவிப்பதாகக் கூறியதால் அதற்கும் மான்செஸ்டர் சிட்டி ஒப்புதல் அளித்தது.

Summary

Enzo Fernandez Manchester City sign from Chelsea for joint-record fee in Premier League

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.