ஆர்செனல் கால்பந்தின் வரலாற்றில் கோல்கீப்பர் டேவிட் ராயாவின் புதிய சாதனை!

ஆர்செனல் கோல்கீப்பர் டேவிட் ராயாவின் வரலாற்றுச் சாதனை குறித்து...

Arsenal's goalkeeper David Raya celebrates after team mate Bukayo Saka scored his side's opening goal during the English Premier League soccer match between Aston Villa and Arsenal in Birmingham, England, Monday, Aug. 31, 2026. (AP Photo/Morgan Harlow)

ஆர்செனல் கோல்கீப்பர் டேவிட் ராயா - படம்: ஏபி

Published On :

ஆர்செனல் கால்பந்து அணியின் கோல்கீப்பர் டேவிட் ராயா 50 க்ளீன் ஷீட்டுகளை (எதிரணிக்கு ஒரு கோல்கூட விடாமல் இருப்பது) பெற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் ஆர்செனல் கால்பந்து அணிக்காக அதிவேகமாக 50 க்ளீன் ஷீட்டுகளைப் பெற்றவராக டேவிட் ராயா (30 வயது) சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கோல்கீப்பர் டேவிட் ராயா பிரீமியர் லீக்கில் ஆர்செனல் அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.

கடந்த சீசனில் ஆர்செனல் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நடப்பு சீசனிலும் முதலிரண்டு போட்டிகளில் வென்று இரண்டாமிடத்தில் இருக்கிறது.

இதுவரை 109 ஆட்டங்களில் டேவிட் ராயா 50 க்ளீன் ஷீட்டுகளை பெற்றுள்ளார். பிரீமியர் லீக் வரலாற்றில் செல்ஸி அணியின் கோல்கீப்பர் பீட்டர் செக் 82 ஆட்டங்களில் 50 க்ளீன் ஷீட்டுகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

பிரீமியர் லீக் வரலாற்றில் அதிவேக 50 க்ளீன் ஷீட்டுகள்

செல்ஸி அணி - பீட்டர் செக் (82)

லிவர்பூல் அணி - பெபே ரெய்னா (92)

மான்செஸ்டர் சிட்டி - எடர்சென் (106)

மான்செஸ்டர் யுனைடெட் - பீட்டர் ஸ்மெய்சல் (108)

ஆர்செனல் அணி - டேவிட் ராயா (109)

Summary

David Raya is the fastest goalkeeper to reach 50 clean sheets (a half-century) in Arsenal history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.