மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

நிம்மதியாக தூங்குவேன்..! வைரலாகும் எர்லிங் ஹாலண்ட் கமெண்ட்!

சமூக வலைதளத்தில் வைரலாகும் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் செய்த கமெண்ட் குறித்து...

Erling Haaland

எர்லிங் ஹாலண்ட் - படம்: எக்ஸ் / எர்லிங் ஹாலண்ட்

Published On :

மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் செய்த கமெண்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரீமியர் லீக்கில் வரலாற்றில் அதிக தொகைக்கு மான்செஸ்டர் சிட்டி அணி செல்ஸி அணியின் மிட்ஃபீல்டர் என்ஜோ பெர்னான்டஸை வாங்கியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி மிகவும் பிரபலமான கிளப் அணியாக இருக்கிறது. இந்த அணி இதுவரை 8 பிரீமியர் கோப்பைகளை (2011–12, 2013–14, 2017–18, 2018–19, 2020–21, 2021–22, 2022–23 மற்றும் 2023–24) வென்றுள்ளன.

இந்த அணியில் இருந்த டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர் ரோட்ரி பார்சிலோனா அணிக்கு மாறினார். அதனால், செல்ஸி அணியில் இருந்த மிட்ஃபீல்டரை மான்செஸ்டர் சிட்டி அணி வாங்கியுள்ளது.

சில நாள்களாகவே என்ஜோ பெர்னான்டஸை மான்செஸ்டர் சிட்டி அணி வாங்கும் எனத் தகவல்கள் வெளியாகிவந்தன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இது உறுதியானது.

இந்த அறிவிப்பிற்கான பதிவின் கீழ் எர்லிங் ஹாலண்ட், ”நல்லது. இனிமேல் நான் நிம்மதியாக தூங்குவேன்” என கமெண்ட் செய்துள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

எர்லிங் ஹாலண்ட் சமூக வலைதளத்தில் மிகவும் சுருசுருப்பாக இருக்கக்கூடியவர். அடிக்கடி அவரது கமெண்ட் வைரலாகும். அவரது தோற்றத்தினால் அவருக்கு இந்த உலகக் கோப்பையில் ரசிகர்கள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

எர்லிங் ஹாலண்ட் செய்த கமெண்ட்டை பிரீமியர் லீக் தனது அதிகாரபூர்வமான பக்கத்தில் பகிர்ந்து, “உங்களது தூக்கத்தை மகிழுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

I will sleep peacefully: Erling Haaland Command Going viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.