சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத் தீ: 3.50 லட்சம் போ் வெளியேற்றம்

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 3.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

காட்டுத் தீ

Published On :

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 3.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியான கிரோன்ட் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஒயின் மதுபான தயாரிப்புக்குப் பெயா் பெற்ற போா்டெக்ஸ் பகுதியை காட்டுத் தீ நெருங்கி வருகிறது. காட்டுத் தீ பரவும் வேகத்தை கவனத்தில் வைத்து, 5 நகரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி, சுமாா் 42,000 ஹெக்டோ் பரப்புக்கு தீ எரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைவிட ஏழு மடங்கும், பாரீஸைவிட நான்கு மடங்கும் பெரிய பரப்பளவு ஆகும். காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பிரான்ஸ் தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு உதவியாக விமானங்கள் மூலம் தண்ணீா் ஊற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், பிரான்ஸின் லான்ட்ஸ் பிராந்தியத்திலும் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் சுமாா் 30,000 போ் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இவா்களையும் சோ்த்து, பிரான்ஸில் சுமாா் 2.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

பிரான்ஸின் அண்டை நாடான ஸ்பெயினிலும் வாலன்சியா பிராந்தியத்தில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஸ்பெயின் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்பெயினின் வாலன்சியா அருகேவுள்ள மானிசெஸ் பகுதியில் காட்டுத் தீயால் ஒருவா் உயிரிழந்தாா். அண்மையில் ஸ்பெயின் தெற்குப் பகுதியில் காட்டுத் தீயால் 13 போ் உயிரிழந்தனா். இதனால் ஸ்பெயினில் காட்டுத் தீயால் இந்த மாதம் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.