
தொடர்ச்சியாக 4ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறி சபலென்கா சாதனை!
யுஎஸ் ஓபன் அரையிறுதியில் வென்ற அரினா சபலென்கா குறித்து...

வெற்றிக் களிப்பில் அரினா சபலென்கா - படம்: ஏபி
யுஎஸ் ஓபன் மகளிர் அரையிறுதியில் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
தொடர்ச்சியாக 4ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறி சபலென்கா சாதனை படைத்துள்ளார். மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பிருக்கிறது.
யுஎஸ் ஓபன் அரையிறுதியில் சொந்த மண்ணின் நாயகி ஜெஸ்ஸிகா பெகுலா - பெலாரஸின் அரினா சபலென்கா மோதினார்கள். இந்தப் போட்டியில் சபலென்கா 7-5, 6-2 என நேர் செட்களில் வென்றார்.
இந்தப் போட்டி 80 நிமிஷங்கள் (1 மணி நேரம் 20 நிமிஷங்கள்) நடைபெற்றன. சபலென்கா நேர் செட்களில் பெகுலாவை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
கடந்த 2024, 2025 யுஎஸ் ஓபனில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். 2023ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள சபலென்காவுக்கு மூன்றாவது கோப்பை வெல்ல நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
Sabalenka has reached the final of every Grand Slam tournament on hard courts for the last 4 years
— ð Aryna Sabalenka ð¯ Daily (@SabalenkaDaily) September 11, 2026
ð¦ðº Australian Open 2023 ð
ðºð¸ US Open 2023ð¥
ð¦ðº Australian Open 2024 ð
ðºð¸ US Open 2024 ð
ð¦ðº Australian Open 2025ð¥
ðºð¸ US Open 2025 ð
ð¦ðº Australian Open 2026ð¥
ðºð¸ US Open 2026â³ pic.twitter.com/G6zN6UCwiS
Aryna Sabalenka is into her FOURTH consecutive US Open final! pic.twitter.com/yqCM5X1nku
— US Open Tennis (@usopen) September 11, 2026
Summary
Aryna Sabalenka beats home favourite Jessica Pegula in straight sets to reach fourth US Open final
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




