முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

பார்ட்டி, கேளிக்கையில் பங்கேற்கிறேனா? செய்தியாளர்கள் சந்திப்பில் கோபமான சபலென்கா!

உலகின் நம்.1 டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்காவின் பேட்டி குறித்து...

Aryna Sabalenka, of Belarus, reacts during a match against Polina Iatcenko, of Russia, during the second round of the U.S. Open tennis championships, Wednesday, Sept. 2, 2026, in New York. (AP Photo/Adam Hunger)

அரினா சபலென்கா - படம்: ஏபி

Published On :3 செப்டம்பர் 2026, 5:51 pm IST

டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா யுஎஸ் ஓபனின் இரண்டாவது சுற்று வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டியில் செய்தியாளர்களின் கேள்விக்கு கடுமையாகப் பேசியது வைரலாகி வருகிறது.

இரண்டாவது சுற்றில் பெலாரஸின் அரினா சபலென்கா - ரஷியாவின் போலினா யாட்செங்கோ உடன் மோதினார். இந்தப் போட்டியில் சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அசத்தினார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் பொறுமையை இழந்த சபலென்கா பேசியது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாகவே சபலென்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகமாக கடற்கரை சுற்றுலாவில் இருப்பதாகவும் மது அருந்துவது போல் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இதனால், அவர் சமீபத்தில் பெரிய வெற்றிகளைப் பெறாமல் இருப்பதாக அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஒரு செய்தியாளர் சபலென்காவிடம், “யுஎஸ் ஓபன் தொடங்கிவிட்டது எப்படி உணர்கிறீர்கள்? கடந்த வாரம் அதிகமான பார்ட்டிகள் இருந்தன; அதனால் உங்களது கவனம் சிதறவில்லையா?” எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சபலென்கா, “இதெல்லாம் என்ன மாதிரியான கேள்வி? நீங்கள் நகைச்சுவை மாதிரி கேட்கிறீர்கள். பார்டி? கேளிக்கை? ஏன் அப்படி கேட்டீர்கள்? எப்படி அப்படி சிந்திக்கிறீர்கள்? நான் சில பிராண்டுகளுடன் இணைந்து சில புகைப்படங்களைப் பகிர்வதால் என்னை பார்ட்டி செய்பவர் என நினைக்கிறீர்களா?” எனக் கடுமையாகப் பேசினார்.

இரண்டாவது சுற்றில் 53 நிமிஷங்களில் அபார வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு சபலென்கா செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பதாவது:

நான் சிறப்பாக விளையாடியதற்கு மகிழ்ச்சி. கடினமாக உழைத்து வருகிறேன். ஆனால், களத்தில் நேர்த்தியாக இருப்பதில் இருந்து விலகிவருவது போல உணர்கிறேன்.

நம்மால் முழுமையான நேர்த்தியுடன் விளையாட முடியாது என்பது தெரியும். தற்போதைக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னில் கவனமாக இருப்பதை மகிழ்கிறேன். என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன் என்றார்.

Summary

Aryna Sabalenka loses cool at reporter over ‘partying and fun’ question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.