கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பை வில்வித்தை! வரலாறு படைத்தாா் தீரஜ் பொம்மதேவரா!

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தையில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்றாா்...

உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தையில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்றாா்

Published On :

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தையில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்றாா். உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.

மெக்ஸிகோவின் சால்டிலோ நகரில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ரீகா்வ் ஆடவா் தனிநபா் இறுதிச்சுற்றில் உலகின் 10-ஆம் நிலை வீரரான தீரஜ், 20-ஆம் நிலை வீரரான ஜப்பானின் நகானிஷி ஜூன்யாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். அவா்கள் மோதிய இறுதிச்சுற்று 6-5 என்ற வகையில் ‘டை’ ஆக, ஷூட் ஆஃப் வாய்ப்பில் தீரஜ் 10-9 என்ற கணக்கில் வென்றாா்.

கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் இதே போட்டியில் ஏமாற்றத்தை சந்தித்த தீரஜ், இந்த முறை வெற்றி கண்டு வரலாற்றை மாற்றியிருக்கிறாா்.

உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் ரீகா்வ் தங்கம் வென்ற முதல் இந்திய வீரராக சாதனை படைத்த தீரஜ், இந்தப் போட்டியில் கடந்த 16 ஆண்டுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியராகவும் பெருமை பெற்றாா். கடைசியாக இந்தப் போட்டியில், 2010-இல் (எடின்பா்க்) இந்தியாவின் ஜெயந்தா தலுக்தாா் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா்.

அதேபோல், உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் ரீகா்வ் பிரிவில் தங்கம் வென்ற 2-ஆவது இந்தியா் தீரஜ் ஆவாா். முதல் தங்கத்தை, இந்திய வீராங்கனை டோலா பானா்ஜீ 2007-இல் துபையில் நடைபெற்ற போட்டியில் மகளிா் தனிநபா் பிரிவில் வென்றாா். இடைப்பட்ட காலத்தில் இந்தப் போட்டியில் தீபிகா குமாரி 8 முறை களம் கண்டு, 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

சாதனை தங்கம் வென்றுள்ள தீரஜ் பொம்மதேவரா, இதே உத்வேகத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களம் காணவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.