
8 மணி நேரம் பயணித்து, தன்னை சந்தித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ரபீனியா!
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரபீனியாவின் புதிய கொண்டாட்டம் குறித்து...

8 மணி நேரம் பயணித்து, தன்னை சந்தித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ரபீனியா - படங்கள்: இன்ஸ்டா / பிரேசில் கால்பந்து
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரபீனியா தனது குட்டி ரசிகரின் வேண்டுதலுக்கு இணங்க அவர் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.
பிரேசில் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியான போட்டியில் மோதியது. இதில் பிரேசில் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ரபீனியா 45ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார். இந்த கோல் அடித்த பிறகு கை விரல்களை கண்ணாடி போல மடக்கி கண்களுக்கு அருகே வைத்து சுற்றினார்.
முன்னதாக, 11 வயதான கால்பந்து ரசிகன் ஜியான் 8 மணி நேரம் பயணம் செய்து பிரிஸ்பேனுக்கு வந்து ரபீனியாவைச் சந்தித்தான்.
அப்போது அந்தச் சிறுவன் தனக்கு பார்வைக் குறைபாடு இருப்பதாகக் கூறி, ஒருவேளை களத்தில் கோல் அடித்தால் இவ்வாறு கொண்டாடம் செய்யும்படி கூறினார். அதனை மறக்காமல் ரபீனியா செய்தது பலரது மனத்தைக் கவர்ந்துள்ளது.
முன்பாக மெஸ்ஸி, நெய்மரிடம் ரசிகர்கள் இதுபோல் கோரிக்கை வைத்து அவர்கள் அதனை நிறைவேற்றுவதும் நடந்திருக்கிறது. அந்த வழியில் ரபீனியாவிற்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
பிரேசிலின் நம்.10 ஜெர்ஸியை ரபீனியா அணிவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீலே, நெய்மர் வரிசையில் ரபீனியா இணைந்துள்ளது அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளது.
Summary
Raphinha fulfills the wish of a young boy who traveled 8 hours to meet him! The celebration is going viral!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







