டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்காட்லாந்து அணி தோல்வியடைந்தது.

News image
Updated On :7 நவம்பர் 2021, 5:36 pm

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்காட்லாந்து அணி தோல்வியடைந்தது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்தன.

முதல் பேட்டிங் முழு விவரங்களுக்கு: இங்கே கிளிக் செய்யவும்

தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் ரிச்சி பெர்ரிங்க்டன் மட்டும் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்காட்லாந்து அணி இந்த தொடரின் கடைசி ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் அனைத்து போட்டிகளையும் வென்ற அணியாக பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது. மேலும், அரையிறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.