தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஸ்வின்-ஜடேஜா அசத்தல்: இந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2021, 3:32 pm

DIN


இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நமீபியா தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தைத் தந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில் மைக்கெல் வான் லிங்கென் 14 ரன்களுக்கு ஜாஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் சூழல் கூட்டணி நமீபியா நடுவரிசை பேட்ஸ்மேன்களை வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பியது.

அஸ்வின் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால், அணியின் ஸ்கோர் உயரவில்லை. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ரன்கள் எடுத்த டேவிட் வீஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

முகமது ஷமி கடைசி ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி கொடுக்க அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.