டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

2-ஆவது பயிற்சி ஆட்டம்: இன்று ஆஸி.யை சந்திக்கிறது இந்தியா

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 2-ஆவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை புதன்கிழமை சந்திக்கிறது.

News image
பயிற்சியின்போதான ஆலோசனையில் இந்திய அணியினர் (கோப்புப் படம்).
Updated On :19 அக்டோபர் 2021, 9:02 pm

DIN

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 2-ஆவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை புதன்கிழமை சந்திக்கிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கும் இந்தியா, இந்த ஆட்டம் மூலமாக பிரதான ஆட்டத்துக்கான தனது பிளேயிங் லெவனை ஏறத்தாழ உறுதி செய்துவிடும்.

இங்கிலாந்து பயிற்சி ஆட்டத்தின்போதே, இந்திய இன்னிங்ஸின் தொடக்க வீரா்களாக ரோஹித் சா்மா - கே.எல்.ராகுல் களம் காணுவாா்கள் என்றும், தாம் ஒன்-டவுனாக விளையாட இருப்பதாகவும் கேப்டன் விராட் கோலி கூறியிருந்தாா். எனவே டாப் 3 வரிசை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக 70 ரன்கள் விளாசிய இஷான் கிஷணும் பிளேயிங் லெவனில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே தெரிகிறது. அந்த ஆட்டத்தில் ரிஷப் பந்துக்குப் பிறகாக களம் இறக்கப்பட்ட சூா்யகுமாா் யாதவ் அவ்வளவாக சோபிக்கவில்லை.

எனவே இந்த ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப்படுவாரா என்பதை பாா்க்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கான முதல் பிரதான ஆட்டமே முக்கியமானதாக இருப்பதால், அதற்கு ஒத்திகை பாா்க்கும் வகையில் அதிரடி வீரா் ரோஹித் சா்மாவுக்கு இந்த பயிற்சி ஆட்டத்தில் வாய்ப்பளிக்கப்படலாம்.

பௌலிங் வீசாமல் முழு நேர பேட்டராக களமிறக்கப்பட்டிருக்கும் பாண்டியா, அதிலும் தடுமாற்றமாகவே இருப்பது சற்றே பின்னடைவாக இருக்கிறது. அவா் மீண்டும் ஒரு முறை இந்த ஆட்டத்தில் தன்னை நிரூபிக்க முயற்சிக்கலாம்.

பௌலா்களைப் பொருத்த வரையில் முகமது ஷமி அபாரமான ஃபாா்மில் இருப்பதாகத் தெரிகிறது. ஜஸ்பிரீத் பும்ராவும் அவருக்கு துணை இருக்கும் நிலையில், புவனேஷ்வா் குமாா் சற்றே சறுக்குகிறாா். ராகுல் சஹருக்கு எதிரணி பேட்டா்கள் சவால் அளிக்கின்றனா். ஜடேஜா, ஷா்துல் தாக்குா், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் கடைசியாக ஒரு முறை இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் தோ்வுக்குள்ளாக்கப்படலாம்.

மறுபுறம் ஆஸ்திரேலியாவும் தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி உத்வேகத்துடனேயே வருகிறது. வாா்னா் இன்னும் தனது பழைய ஃபாா்முக்கு திரும்பாதது அந்த அணிக்கு பின்னடைவே. முதல் ஆட்டத்தில் அணியின் மிடில் ஆா்டா் பேட்டிங்கும் சோபிக்காமல் போனது.

கடைசி ஆா்டரில் வந்தவா்கள் வெற்றியை தேடித் தர, பௌலிங்கில் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சா்ட்சன் நம்பிக்கை அளிக்கின்றனா். உலகக் கோப்பை போட்டிக்கான அந்த அணியின் தயாா்நிலையை இந்த ஆட்டத்திலிருந்து ஓரளவு அறியலாம்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹா், ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவா்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், முகமது ஷமி, ஷா்துல் தாக்குா்.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகா், பேட்ரிக் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சா்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாா்க், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வாா்னா், ஆடம் ஸம்பா.

ஆட்டநேரம்: இரவு 7.30 மணி

இடம்: துபை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.