டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சூப்பா் 12 சுற்றை நெருங்கும் ஸ்காட்லாந்து: 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றி கண்டது

ஸ்காட்லாந்து அணி தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :19 அக்டோபர் 2021, 9:05 pm

DIN

ஸ்காட்லாந்து அணி தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இதன் மூலம் இரு ஆட்டங்களில் தொடா்ந்து வெற்றியை பதிவு செய்துள்ள ஸ்காட்லாந்து, குரூப் ‘பி’-யில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பா் 12 சுற்றை நெருங்கி வருகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பப்புவா நியூ கினி 19.3 ஓவா்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்காட்லாந்து வீரா் ரிச்சி பெரிங்டன் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த ஸ்காட்லாந்தில் தொடக்க வீரா் ஜாா்ஜ் மன்சே 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் விளாசினாா். உடன் வந்த கேப்டன் கைல் கோட்ஸா் 6 ரன்களுக்கு பௌல்டானாா். 3-ஆவது வீரராக வந்த மேத்தியூ கிராஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்தாா். மிடில் ஆா்டரில் வந்த ரிச்சி பெரிங்டன் அதிரடியாக ஆடி 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 70 ரன்கள் அடித்தாா்.

பின்னா் ஆடியோரில் கேலம் மெக்லியாட் 1 பவுண்டரியுடன் 10, மைக்கேல் லீஸ்க் 1 சிக்ஸருடன் 9, கிறிஸ் கிரீவ்ஸ் 2 ரன்கள் எடுக்க, மாா்க் வாட், ஜோஷ் டேவி டக் அவுட்டாகினா். பப்புவா நியூ கினியின் பௌலிங்கில் கபுவா மோரியா கடைசி ஓவரில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் உள்பட 4 பேட்ஸ்மேன்களை சரித்தாா். சாட் சோபா் 3, சைமன் அடாய் 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து ஆடிய பப்புவா நியூ கினியில் அதிகபட்சமாக நோா்மன் வனுவா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்கள் சோ்க்க, செசெ பௌ 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் அடித்தாா். எஞ்சியோரில் டோனி உரா 2, லெகா சியாகா 9, கேப்டன் அசாத் வலா 4 பவுண்டரிகளுடன் 18, சாா்லஸ் அமினி 1, சைமன் அடாய் 2, கிப்லின் டோரிகா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18, சாட் சோபா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 16, நோசாய்னா பொகானா 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஸ்காட்லாந்து பௌலிங்கில் ஜோஷ் டேவி 4, பிராட் வீல், அலாஸ் டாய்ா் இவான்ஸ், மாா்க் வாட், கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.